வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

டொரன்டோ: கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 10-ஆவது சுற்றில், இந்தியாவின் வைஷாலி வெற்றி பெற்றார். இதர இந்தியர்களான குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், கோனெரு ஹம்பி ஆகியோர் டிரா செய்தனர்.

கனடாவில் நடைபெறும் இந்தப் போட்டியில், மகளிர் பிரிவில் வைஷாலி - பல்கேரியாவின் நர்கியுல் சலிமோவாவை வீழ்த்தினார். கோனெரு ஹம்பி - சீனாவின் ஜோங்யி டான், ரஷியாவின் கேத்தரினா லாக்னோ - உக்ரைனின் அனா முஸிஷுக் மோதல்கள் டிரா ஆகின. ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா - சீனாவின் டிங்ஜெய் லெய்யிடம் தோல்வி கண்டார்.

ஒபன் பிரிவில், குகேஷ் - ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, பிரக்ஞானந்தா - விதித் குஜராத்தி மோதல்கள் டிரா ஆக, அமெரிக்காவின் ஹிகரு நகமுரா - அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவையும், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - பிரான்ஸின் ஃபிரெஸோ அலிரெஸாவையும் வீழ்த்தினர்.

10 சுற்றுகள் முடிவில், ஓபன் பிரிவில் குகேஷ், நெபோம்னியச்சி தலா 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, பிரக்ஞானந்தா, நகமுரா, கரானா ஆகியோர் தலா ஐந்தரை புள்ளிகளோடு 3-ஆவது இடத்தில் இருக்கின்றனர். விதித் (5), அலிரெஸா (மூன்றரை), அபாசோவ் (3) ஆகியோர் முறையே 6 முதல் 8-ஆவது இடங்களில் உள்ளனர்.

மகளிர் பிரிவில், லெய், டான் ஆகியோர் தலா ஆறரை புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துகொள்ள, லாக்னோ, கோரியச்கினா தலா ஐந்தரை புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளனர். சலிமோவா, முஸிஷுக் தலா 4 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பகிர, வைஷாலி மூன்றரை புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com