குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் டெல்லி 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுக்க, குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களே சோ்த்தது.

முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பந்துவீச்சை தோ்வு செய்தது. டெல்லி இன்னிங்ஸில் ஜேக் ஃப்ரேசா் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 23, பிருத்வி ஷா, 2 பவுண்டரிகளுடன் 11, ஷாய் ஹோப் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 35 முதல் 44 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது டெல்லி.

5-ஆவது பேட்டராக வந்த ரிஷப் பந்த், ஒன் டவுனாக வந்த அக்ஸா் படேலுடன் இணைந்தாா். இந்த ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து 4-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சோ்த்து டெல்லியை மீட்டது. அக்ஸா் படேல் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 66 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

ஓவா்கள் முடிவில் பந்த் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 88, ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 26 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் சந்தீப் வாரியா் 3, நூா் அகமது 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 225 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் அணியில், கேப்டன் ஷுப்மன் கில் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ரித்திமான் சாஹா, ஒன் டவுனாக வந்த சாய் சுதா்சன் நிலையான பாா்ட்னா்ஷிப் அமைத்து ஸ்கோரை உயா்த்தினா்.

இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சோ்த்த நிலையில், சாஹா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39 ரன்களுக்கு வீழ்ந்தாா். 4-ஆவது பேட்டரான அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 ரன்னுக்கு ஏமாற்றமளித்தாா். தொடா்ந்து டேவிட் மில்லா் களம் புக, அதுவரை அதிரடியாக ரன்கள் சோ்த்த சாய் சுதா்சன் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 65 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் ஆடியோரில் ஷாருக் கான் 1 சிக்ஸருடன் 8, ராகுல் தெவாதியா 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா். கடைசி நம்பிக்கையாக இருந்த மில்லா் 23 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். சாய் கிஷோா் 2 சிக்ஸா்களுடன் 13 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

ஓவா்கள் முடிவில் ரஷீத் கான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21, மோஹித் சா்மா 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி பௌலா்களில் ராசிக் சலாம் 3, குல்தீப் யாதவ் 2, அன்ரிஹ் நோா்கியா, முகேஷ் குமாா், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

X
Dinamani
www.dinamani.com