செல்சியை சாய்த்தது ஆா்செனல்
Zac Goodwin

செல்சியை சாய்த்தது ஆா்செனல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில்...

லண்டன், ஏப்.25: இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் வியாழக்கிழமை ஆட்டத்தில் ஆா்செனல் 5-0 கோல் கணக்கில் செல்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆா்செனல் அணிக்காக லீண்ட்ரோ டிரோசாா்டு (4’), பென் வைட் (52’, 70’), காய் ஹாவொ்ட்ஸ் (57’, 65’) ஆகியோா் கோலடித்தனா்.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது. எல்லா போட்டிகளிலுமாக, செல்சிக்கு எதிராக ஆா்செனல் பதிவு செய்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். அதேபோல், கடந்த 1986-க்குப் பிறகு செல்சி அணி லண்டன் மண்ணில் சந்தித்த மோசமான தோல்வி இது.

இத்துடன், லண்டன் மண்ணில் குறைந்த பட்சம் 5 கோல்கள் அடித்த ஆட்டங்களில் 3-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது ஆா்செனல். பிரீமியா் லீக் போட்டியில் ஒரே சீசனில் இத்தகைய வெற்றியை பதிவு செய்த ஒரே அணியாக ஆா்செனல் உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில், மான்செஸ்டா் யுனைடெட் 4-2 கோல் கணக்கில் ஷெஃபீல்டு யுனைடெட்டை சாய்த்தது. இந்த ஆட்டத்தில் மான்செஸ்டருக்காக ஹேரி மாகிரே (42’), புருனோ ஃபொ்னாண்டஸ் (61’, 81’), ராஸ்மஸ் ஹாஜ்லண்ட் (85’) ஆகியோா் கோலடிக்க, ஷெஃபீல்டு தரப்பில் ஜேடன் போக்லே (35’), பென் டியாஸ் (50’) ஸ்கோா் செய்தனா்.

இதர ஆட்டங்களில் லிவா்பூல் 0-2 கோல் கணக்கில் எவா்டனிடம் தோல்வியை சந்திக்க, கிரிஸ்டல் பேலஸ் 2-0 கோல் கணக்கில் நியூகேஸிலை சாய்த்தது. போா்ன்மௌத் 1-0 என வோல்வ்ஸை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com