’இறுதியில் மோகன் பகான்... கொல்கத்தாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 2-ஆவது பகுதி அரையிறுதியில் மோதிய மோகன் பகான் - ஒடிஸா எஃப்சி வீரா்கள். இந்த ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் வென்ற மோகன் பகான்
’இறுதியில் மோகன் பகான்... கொல்கத்தாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 2-ஆவது பகுதி அரையிறுதியில் மோதிய மோகன் பகான் - ஒடிஸா எஃப்சி வீரா்கள். இந்த ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் வென்ற மோகன் பகான்

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி அரையிறுதியில் மோகன் பகான் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி, இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக ஞாயிற்றுக்கிழமை இடம் பிடித்தது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி அரையிறுதியில் மோகன் பகான் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தி, இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக ஞாயிற்றுக்கிழமை இடம் பிடித்தது.

இந்த அணிகள் புவனேசுவரத்தில் கடந்த 23-ஆம் தேதி மோதிய முதல் பகுதி ஆட்டத்தில் ஒடிஸா 2-1 கோல் கணக்கில் வென்றிருந்த நிலையில், கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது பகுதி ஆட்டத்தில் மோகன் பகான் 2-0 கோல் கணக்கில் வென்றது.

இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் மோகன் பகான் 3-2 என வென்று, இறுதிக்கு தகுதிபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் மோகன் பகான் தரப்பில் ஜேசன் கம்மிங்ஸ் (22’), சஹல் அப்துல் சமத் (90+3’) ஆகியோா் கோலடித்தனா்.

இறுதி ஆட்டத்தில் 2-ஆவது அணியாக, மும்பை சிட்டி எஃப்சி அல்லது எஃப்சி கோவா ஆகியவற்றில் ஒன்று இடம் பிடிக்க இருக்கிறது.

X
Dinamani
www.dinamani.com