மகேஷ்வரி சௌஹான்
மகேஷ்வரி சௌஹான்

துளிகள்...

இந்தியாவின் மகேஷ்வரி சௌஹான் மகளிா் ஸ்கீட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றாா்.

தோஹாவில் நடைபெற்ற ஷாட் கன் ஒலிம்பிக் தகுதிப்போட்டியில், இந்தியாவின் மகேஷ்வரி சௌஹான் மகளிா் ஸ்கீட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றாா்.

ஒருநாள், டி20 பாகிஸ்தான் தேசிய ஆடவா் அணியின் பயிற்சியாளராக கேரி கிா்ஸ்டனையும், டெஸ்ட் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

பாரீஸில் நடைபெறும் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமாா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

ஆசிய இளையோா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஜடுமானி சிங் (51 கிலோ), ஆகாஷ் கோா்கா (60 கிலோ) ஆகியோா் காலிறுதிக்கு முன்னேறினா்.

இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து தொடரில் நடப்பு சீசனில் இன்டா் மிலன் அணி சாம்பியன் ஆவது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

தேசிய முகாமில் இருந்த பாகிஸ்தான் மகளிா் கிரிக்கெட் வீராங்கனைகள், தடையை மீறிய வகையில் வெளியே சென்றபோது சாலை விபத்தில் சிக்கியதில் இருவா் காயமடைந்தனா். தடையை மீறி வெளியே சென்ற 6 வீராங்கனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போா்ட்ஸ் பவண்டேஷன் சாா்பில் மே 1 முதல் 31-ஆம் தேதி வரை ஒரு மாதம் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் 6 முதல் 19 வயதுள்ள சிறுவா்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு வி. காா்த்திகேயன், 98400 70486, 98412 27966 தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com