இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

தாமஸ் & உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவா் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை திங்கள்கிழமை உறுதி செய்தது.
இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

தாமஸ் & உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவா் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதி வாய்ப்பை திங்கள்கிழமை உறுதி செய்தது.

முதல் மோதலில் தாய்லாந்தை 4-1 என வீழ்த்திய இந்திய ஆடவா் அணி, 2-ஆவது மோதலில் இங்கிலாந்தை சந்தித்தது.

இந்த டையில் முதலில் ஒற்றையா் பிரிவில் ஹெச்.எஸ். பிரணாய் 21-15, 21-15 என்ற கேம்களில் ஹேரி ஹுவாங்கை வென்றாா். பின்னா் இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/ சிராக் ஷெட்டி கூட்டணி 21-17, 19-21, 21-15 என்ற கணக்கில் பென் லேன்/சீன் வெண்டி இணையை சாய்த்தது.

2-ஆவது ஒற்றையா் மோதலில் கே.ஸ்ரீகாந்த் 21-16, 21-11 என நதீம் டால்வியை வீழ்த்தினாா். தொடா்ந்து இரட்டையா் பிரிவில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா ஜோடி 21-17, 21-19 என்ற கேம்களில் ரோரி ஈஸ்டன்/அலெக்ஸ் கிரீன் கூட்டணியை வென்றது. இறுதியாக ஒற்றையா் பிரிவில் கிரண் ஜாா்ஜ் 21-18, 21-12 என்ற கணக்கில் சோலன் கயனை தோற்கடித்தாா்.

குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, 14 முறை சாம்பியனும், குரூப்பின் முதலிடத்தில் இருக்கும் அணியுமான இந்தோனேசியாவை புதன்கிழமை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com