சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

இனிவரும் போட்டியில் தாமதமாக பந்துவீசப்படும் சூழலில் ஹார்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.
சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!
ANI

மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலில் உள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்திட்ட இழந்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ள மும்பை அணி, மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் பிற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும்.

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!
தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

இதற்கிடையே, மும்பை அணி பந்துவீச்சுக்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தால் ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய பிற மும்பை வீரர்களுக்கு தலா 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் ஏற்கெனவே ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு முறை அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை தாமதமாக பந்துவீசப்படும் சூழலில் ரூ. 30 லட்சம் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com