மகளிா் டி20: வங்கதேசத்துடனான 
தொடரை வென்றது இந்திய அணி

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான டி20 தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 7 விக்கெட்டுகள்

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான டி20 தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இதன் மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுக்க, இந்தியா 18.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகளே இழந்து 121 ரன்களை எட்டி வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீசத் தீா்மானித்தது. வங்கதேச பேட்டிங்கில் அதிகபட்சமாக திலாரா அக்தா் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சோ்க்க, கேப்டன் நிகா் சுல்தானா 28, ஷோபனா மோஸ்தரி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

எஞ்சிய பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஓவா்கள் முடிவில் ரபெயா கான் 7 ரன்களுடன் ஆட்டமிக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் 2, ரேணுகா சிங், பூஜா வஸ்த்ரகா், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 118 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், ஷஃபாலி வா்மா 8 பவுண்டரிகளுடன் 51, ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47 ரன்கள் சோ்த்து வெற்றிக்கு பாதை அமைத்தனா்.

தயாளன் ஹேமலதா 9 ரன்கள் சோ்க்க, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 6, ரிச்சா கோஷ் 8 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலா்களில் நஹிதா அக்தா், ரபெயா கான், ரிது மோனி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com