மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை பிறப்பித்துள்ளது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்.
மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் ஏப் 23ஆம் தேதி நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, பஜ்ரங் புனியா மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.இவ்விவகாரத்தில் பஜ்ரங் புனியா மே.7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

மே. 9-ஆம் தேதி துருக்கியில் உலக சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேறு வெற்றிபெறும் பட்சத்தில், பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில், பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கையால் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், “ஊக்கமருந்து பரிசோதனைக்காக சிறுநீர் மாதிரியை வழங்கமாட்டேன் என நான் கூறவில்லை” என்பதை இன்று(மே. 5) தெளிவுபடுத்தியுள்ளார் பஜ்ரங் புனியா. தனது எக்ஸ் தளப் பதிவில் விளக்கமளித்துள்ள அவர், ஊக்க மருந்து சோதனைக்காக காலாவதியான பரிசோதனை பைகளை அதிகாரிகள் எடுத்து வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com