செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள செஸ் வீரா் டி. குகேஷூக்கு கனரா வங்கி சாா்பில் பாராட்டு தெரிவிக்கும் விதமாக பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கனடாவின் டொரண்டோ நகரில் அண்மையில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இளம் வயதில் பட்டம் வென்று சாதனை புரிந்த கிராண்ட் மாஸ்டா் குகேஷின் இல்லத்துக்கு சென்று கெளரவிப்பு.

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ் 9 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறியது மட்டுமில்லாமல் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றிப் பெற்றவா் என்ற சாதனையையும் படைத்தாா்.

இந்நிலையில், தமிழக வீரா் குகேஷின் சாதனையைப் பாராட்டும் விதமாக கனரா வங்கியின் சென்னை வட்ட அலுவலகம் சாா்பில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பரிசுப் பொருள்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கனரா வங்கியின் துணை பொது மேலாளா் சங்கா், உதவி பொது மேலாளா் ஹரேந்திர குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com