12-வது முறையாக அடிக்கப்பட்ட இரட்டை சதம்; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 10  முறை இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. 
12-வது முறையாக அடிக்கப்பட்ட இரட்டை சதம்; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 12  முறை இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. 

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசங்கா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் 210 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை சார்பில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 12 முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 12 இரட்டை சதங்களில் 7 முறை இந்திய வீரர்களே இரட்டை சதம் விளாசியுள்ளனர்.

இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனிநபரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்கள்

வ.எண் வீரர் ரன்கள் எதிரணி ஆண்டு
 1 ரோஹித் சர்மா 264  இலங்கை 2014
 2 மார்ட்டின் கப்டில் 237*  மேற்கிந்தியத் தீவுகள்  2015
 3 வீரேந்தர் சேவாக்  219 மேற்கிந்தியத் தீவுகள் 2011
 4 கிறிஸ் கெயில் 215  ஜிம்பாப்வே 2015
 5  ஃபகர் ஸமான் 210* ஜிம்பாப்வே 2018
 6  பதும் நிசங்கா 210* ஆப்கானிஸ்தான் 2024
 7 இஷான் கிஷன் 210 வங்கதேசம் 2022
 8 ரோஹித் சர்மா 209 ஆஸ்திரேலியா 2013
 9 ரோஹித் சர்மா 208* இலங்கை 2017
 10 ஷுப்மன் கில் 208 நியூசிலாந்து 2023
 11  கிளன் மேக்ஸ்வெல் 201* ஆப்கானிஸ்தான் 2023
 12  சச்சின் டெண்டுல்கர்  200* தென்னாப்பிரிக்கா 2010

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com