
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 10 வீரர்களில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (ஜனவரி 12) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
Tim Southee became the first bowler to breach the 150-wicket barrier in men's T20Is
â ICC (@ICC) January 12, 2024
Details https://t.co/9vkxGBD0JQ#NZvPAK pic.twitter.com/F6DKpuk9S6
சர்வதேச டி20 போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களில் ஒருவர் கூட இந்திய அணியிலிருந்து இடம்பெறவில்லை.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்
1. டிம் சௌதி (நியூசிலாந்து) - 151 விக்கெட்டுகள்
2. ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 140 விக்கெட்டுகள்
3. ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 130 விக்கெட்டுகள்
4. ஈஷ் சோதி (நியூசிலாந்து) - 127 விக்கெட்டுகள்
5. லசித் மலிங்கா (இலங்கை) - 107 விக்கெட்டுகள்
6. அடில் ரஷீத் (இங்கிலாந்து) - 107 விக்கெட்டுகள்
7. முஸ்தபிசூர் ரஹ்மான் (வங்கதேசம்) - 105 விக்கெட்டுகள்
8. மிட்செல் சாண்ட்னர் (நியூசிலாந்து) - 105 விக்கெட்டுகள்
9. ஷதாப் கான் (பாகிஸ்தான்) - 104 விக்கெட்டுகள்
10. மார்க் அடாய்ர் (அயர்லாந்து) - 102 விக்கெட்டுகள்
இந்திய சார்பில் சர்வதேச டி20 போட்டிகளில் யுஸ்வேந்திர சஹால் 96 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






