டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது: பாட் கம்மின்ஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றதில் தனக்கு மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். 

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றதில் தனக்கு மகிழ்ச்சி என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தோல்வி ஏமாற்றமளிக்கிறது. அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியில் இரண்டு மூன்று நட்சத்திர வீரர்கள் உருவாகியுள்ளார்கள். இந்தத் தொடருக்கு முன்னதாக அவர்களை எங்களுக்குப் பெரிதாக தெரியாது. கிரிக்கெட் போட்டியின் ரசிகனாக, அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com