பிரபல நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சகோதரர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியின் அம்மா (சரோஜ் கோலி) உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவியன. அம்மாவின் உடல் நலத்தால்தான் கோலி விளையாடவில்லை என தகவல்கள் வைரலாகின.
இது குறித்து மனம் உடைந்த விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி தனது இன்ஸ்டாகிராமில், “அனவைருக்கும் வணக்கம், எனது அம்மாவின் உடல் நிலை குறித்து தவறான தகவல் பரவி வருகின்றன. எனது அம்மா நலத்துடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறேன். உண்மையான தகவல்கள் தெரியாமல் தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என மக்கள், ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன். உங்களது அக்கறைக்காக நன்றி” எனக் கூறியுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் கோலி இல்லாததால் இந்திய அணி தோல்வியுற்றது. 2வது போட்டியிலும் அவர் பங்கேற்கப்போவதில்லை. அதனால் இதில் இந்திய அணி வெற்றி பெருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.