அக். 30-ல் உலகக் கோப்பை செஸ் போட்டி தொடக்கம்!

அக். 30-ல் உலகக் கோப்பை செஸ் போட்டி தொடக்கம்!

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி வரும் அக். 30-ஆம் தேதி தொடங்கி நவ. 27 வரை நடைபெறவுள்ளது.
Published on

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி வரும் அக். 30-ஆம் தேதி தொடங்கி நவ. 27 வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்த் 80 நாடுகளில் இருந்து 206 தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.

நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ள இப்போட்டியில் மொத்த பரிசுத் தொகை ரூ.17.65 கோடி ஆகும். சாம்பியனுக்கு ரூ.1.05 கோடியும், ரன்னருக்கு ரூ.75 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இதில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோா் 2026 ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவா்.

இதுதொடா்பாக ஃபிடே தலைவா் அா்கடி வோா்கோவிச் கூறியது: 23 ஆண்டுகளுக்குபின் இந்தியாவில் மீண்டும் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெறவுள்ளது. 8 சுற்றுகள் கொண்ட இதில் நாக் அவுட் முறையில் நடைபெறும். நிா்ணயித்த நேரத்தில் 2 கிளாஸிக்கல் கேம்கள் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெறும்.

தலைசிறந்த 50 வீரா்கள் முதல் சுற்றில் பை பெற்றுள்ளனா். 156 போட்டியாளா்கள் நவ. 1-இல் தங்கள் ஆட்டங்களில் பங்கேற்பா்.

உலகச் சாம்பியன் டி. குகேஷ் கூறியது: இந்தியாவில் எங்கு உலகக் கோப்பை நடைபெற்றாலும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பேன். கோவாவில் ஜூனியா் போட்டிகளில் பங்கேற்று ஆடியுள்ளேன் என்றாா்.

இந்திய அணியில் டி. குகேஷ், அா்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நிஹால் சரீன் உள்ளனா். சா்வதேச வீரா்களில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், நெதா்லாந்தின் அனிஷ் கிரி, அமெரிக்காவின் வெஸ்லி சோ, லெவோன் ஆரோனியன், சீனாவின் வெய் யி பங்கேற்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com