இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை: தெ.ஆ. அணியில் மீண்டும் டி காக்

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இலங்கைக்கு எதிரான டி20 உலகக் கோப்பை: தெ.ஆ. அணியில் மீண்டும் டி காக்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

தெ.ஆ. அணியில் கிளாசென்னுக்குப் பதிலாக டி காக் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியில் மாற்றம் எதுவுமில்லை.

சில நாள்களுக்கு முன்பு இருந்ததை விடவும் அணியினரின் மனநிலை தற்போது நன்றாக உள்ளது. டி காக்கும் ஆர்வத்துடன் உள்ளார். இந்த ஆட்டத்துக்கு நாங்கள் நன்குத் தயாராகியுள்ளோம் என தெ.ஆ. கேப்டன் பவுமா கூறியுள்ளார்.  

கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டி காக் விலகினார். இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எனினும் தன்னுடைய நிலையை விளக்கிய டி காக், தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் விளையாடவுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் அவர் இடம்பெற்றுள்ளார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com