400 டி20 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை

ஆறு வருடங்களில் 289 ஆட்டங்களில் விளையாடி 400 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார் ரஷித் கான். 
400 டி20 விக்கெட்டுகள் எடுத்து ரஷித் கான் புதிய சாதனை

டி20 ஆட்டங்களில் விளையாட ஆரம்பித்த ஆறு வருடங்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ரஷித் கான்.

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார் பிரபல ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இது அவருடைய 400-வது டி20 விக்கெட்.

ஆறு வருடங்களில் 289 ஆட்டங்களில் விளையாடி 400 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார் ரஷித் கான். 

ஒரு துறையில் சாதனை படைத்தவர்களை, நீண்ட காலம் பங்களித்தவர்களை Goat என்பார்கள். அதாவது Greatest Of All Time. டி20 கிரிக்கெட்டில் கோட் என்கிற முத்திரையைப் பெறக்கூடியவராக உள்ளார் 23 வயது ரஷித் கான். 

டி20 கிரிக்கெட்டில் மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே 400 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 400 விக்கெட்டுகளை முதல்முதலாக எடுத்த டுவைன் பிராவோவுக்கு 364 ஆட்டங்கள் தேவைப்பட்டன. மேலும் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரரும் அவர்தான். அதற்கு அடுத்ததாக, இம்ரான் தாஹிர் 320 ஆட்டங்களிலும் சுநீல் நரைன் 362 ஆட்டங்களிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். எனினும் ரஷித் கானுக்கு 400 விக்கெட்டுகளை எடுக்க 289 ஆட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டுள்ளன. இதனால் குறைந்த ஆட்டங்களில் 400 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com