மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை: டி காக் விலகலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை: டி காக் விலகலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மே.இ. தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளன. பலமான அணிகள் கொண்ட குரூப் 1 பிரிவில் இரு தோல்விகளை அடைந்தால் அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் சவாலானதாக அமையும்.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் டி காக் விலகியுள்ளதாக தெ.ஆ. அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். மே.இ. தீவுகள் அணியில் ஒபட் மெகாய்க்குப் பதிலாக ஹேடன் வால்ஷ் இடம்பெற்றுள்ளார். மிகமுக்கியமான ஆட்டத்தில் டி காக் விலகியுள்ளதால் தெ.ஆ. ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com