தென்னாப்பிரிக்காவுடன் 9 ஓவர் ஆட்டம்: ஜிம்பாப்வே 79 ரன்கள்!

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.
படம்: ட்விட்டர் | டி20 உலகக் கோப்பை
படம்: ட்விட்டர் | டி20 உலகக் கோப்பை


டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் இன்றைய (திங்கள்கிழமை) 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் ஹோபார்டில் விளையாடுகின்றன. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை காரணமாக நிறைய நேரம் வீணானதால், ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. பவர் பிளே 3 ஓவர்கள், 4 பந்துவீச்சாளர்கள் அதிகபட்சம் தலா 2 ஓவர்கள் வீசலாம் என விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. 9 ஓவர் ஆட்டம் என்பதால், ஜிம்பாப்வே பேட்டர்கள், தொடக்கம் முதலே அதிரடி முனைப்பைக் காட்டினர்.

இதனால், அந்த அணி 19 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன்பிறகு, வெஸ்லே மதவெரே மற்றும் மில்டன் ஷும்பா இணை பாட்னர்ஷிப்பை கட்டமைத்தது.

மதவெரே போகப்போக அதிரடி காட்ட, ஜிம்பாப்வே ஸ்கோர் சற்று உயர்ந்தது. பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடிய ஷும்பா இன்னிங்ஸின் கடைசி பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மதவெரே 18 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com