இ மெயில் பூஜைக்கு வரவேற்பு: பக்தர்கள் வசதிக்காக மதுரை மீனாட்சி கோயிலில் குளிர்சாதன வசதி

மதுரை, அக். 20:    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன், சுவாமி சன்னதிகளில் பக்தர்கள் வசதிக்காக ரூ.30 லட்சத்தில் குளிர்சாதனக் கருவிகள் நிறுவப்பட உள்ளன.   பிரபல ஜவுளி நிறுவனம் ஒ
இ மெயில் பூஜைக்கு வரவேற்பு: பக்தர்கள் வசதிக்காக மதுரை மீனாட்சி கோயிலில் குளிர்சாதன வசதி
Updated on
1 min read

மதுரை, அக். 20:    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன், சுவாமி சன்னதிகளில் பக்தர்கள் வசதிக்காக ரூ.30 லட்சத்தில் குளிர்சாதனக் கருவிகள் நிறுவப்பட உள்ளன.

  பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று இத்திட்டத்துக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளதாக கோயில் உயர் அதிகார வட்டாரங்கள் தெரிக்கின்றன.

  உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கும்பாபிஷேகத்துக்கு பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 2 மடங்கு கூடுதலாகி உள்ளது.

  சாதாரண நாள்களில் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பக்தர்கள் வரை கோயிலுக்கு வந்து செல்வதாகவும், திருவிழாக் காலங்களில் 1 லட்சம் பேர் வரை கோயிலுக்கு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தற்போது அம்மன் சன்னதி உள்ளே ஏர்கூலர் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய விழா நாள்களில் மட்டுமே இவற்றைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. பக்தர்களது எண்ணிக்கை பல மடங்கு கூடுதலாகி உள்ளதால் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதியில் மட்டும் குளிர்சாதன வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் நடை திறந்திருக்கும் நேரத்தில் மட்டும் குளிர்சாதனக் கருவிகள் செயல்பாட்டில் இருக்கும்.

இமெயில் பூஜைக்கு வரவேற்பு:  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இணையதளம் மூலம் பூஜைக்கு பதிவு செய்யும் முறை கடந்த 2007 -ல் தொடங்கப்பட்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமும் ஈமெயில் பூஜைக்கு பதிவுசெய்து வருகின்றனர். இதுவரை ஈமெயில் பூஜை முறையில் 3409 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது, அபிஷேகத்துக்காக ரூ.1500 செலுத்திவருகிறார்கள்.

  ஈமெயில் பூஜையில் பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதத்தை தபால் மூலம் கோயில் நிர்வாகம் அனுப்பிவருகிறது.

  கடந்த 6 மாதத்தில் மட்டும் ஈமெயில் பூஜை மூலம் ரூ.1 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர்கள் கூறினர். ஆரம்பத்தில் தினமும் 4 பேர் ஈமெயில் பூஜை செய்த நிலையில் தற்போது அது 3 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் ஈமெயில் பூஜைக்கு தினமும் கட்டணம் செலுத்தி வருவதாகவும் கோயில் நிர்வாக அலுவலர் க.ராஜநாயகம் தெரிவிக்கிறார்.

இணையதளம்:திருக்கோயில் இணையதளத்தை (ம்ஹக்ன்ழ்ஹண்ம்ங்ங்ய்ஹந்ள்ட்ண்.ஞழ்ஞ்) கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 1.50 லட்சம் பேர் வரை பார்த்திருக்கின்றனர். மேலும் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு இதுவரை 50 ஆயிரம் பேர் இணையதளத்தின் மூலம் திருக்கோயில் அமைப்பை பார்வையிட்டுள்ளனர்.

  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட "சுழலும் லிங்கம்' உள்ளிட்ட நவீன ஓவியங்களையும் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com