அரசு மாணவர் விடுதிகளில் காட்சிப் பொருளாக இலவச கலர் டி.வி.க்கள்

தேனி : அரசு மாணவர் விடுதிகளுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில்
அரசு மாணவர் விடுதிகளில் காட்சிப் பொருளாக இலவச கலர் டி.வி.க்கள்
Updated on
1 min read

தேனி : அரசு மாணவர் விடுதிகளுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

 தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 1,565 ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

÷அரசு மாணவர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், தொலைகாட்சி மூலம் கல்வி ஒளிபரப்புகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதற்கு அரசு சார்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து விடுதிகளுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலா ரூ. 3,200 மதிப்பிலான இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்  வழங்கப்பட்டன.

 தற்போது, அனைத்து விடுதிகளிலும் இந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன.

 இதுகுறித்து விடுதிப் பணியாளர்கள் கூறியதாவது:

 விடுதிகளுக்கு இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிய அரசு, அதற்குரிய ஆன்டனா, டிஷ், கேபிள் இணைப்பு ஆகியவற்றிற்கு நிதி வழங்கவில்லை. மேலும், தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது குறித்து உயர்  அதிகாரிகள் எவ்வித வழிகாட்டுதலும் வழங்கவில்லை.

இதனால், அவற்றை பயன்படுத்த முடியாமல் வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

 சில இடங்களில், விடுதிக் காப்பாளர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் கேபிள் இணைப்பு பெற்று, தொலைக்காட்சிப் பெட்டியை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

 பெரும்பாலான இடங்களில், அரசு உத்தரவு இல்லாமல் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு ஆன்டனா பொருத்தவும், கேபிள் இணைப்பு பெறுவதற்கும் காப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

 ஆன்டனா மற்றும் கேபிள் இணைப்பிற்கான செலவுகளை எவ்விதம் மேற்கொள்வது என்ற குழப்பத்தில், அரசு மாணவர் விடுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேல் காட்சிப் பொருளாக உள்ளன.

அட்டைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று மாணவ, மாணவிகள் ஏக்கத்தில் உள்ளனர்.

 அரசு மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவ, மாணவிகள் மற்றும் விடுதி பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com