

புதுச்சேரி: பொதுவாக விவசாய விளை பொருள்களான நெல், அரிசி, கம்பு, கேழ்வரகு, உளுந்து பச்சைப் பயறு, காராமணி, கோதுமை மற்றும் தவிடு வகைகள், நிலக்கடலை போன்றவற்றை விவசாயிகள் நல்ல விலைக்கு விற்பதற்காக சேமித்து வைக்கிறார்கள்.
சேமிப்புப் பழக்கம் முந்தைய காலத்தில் இருந்து வரும் ஒரு முறை. விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் உற்பத்தி செய்த தானியங்கள் மற்றும் பயிறு வகைகளை குதிர்களிலும், தொம்பைகளிலும் பெரிய பெரிய பானைகளிலும் சேகரித்து வைத்தனர்.
இப்படி சேகரிக்கும் தானியங்களைப் பூச்சிகள் தாக்காத வகையில் அந்த தானியங்களில் சாம்பல் கலந்து வைத்தனர். களிமண், செம்மண், வேப்பந்தழை, நொச்சித் தழை இதையெல்லாம் கலந்து வைத்தனர். இவை பூச்சி விரட்டிகளாகச் செயல்பட்டன. அதற்கு அடுத்த நிலையில் விவசாயிகள் தங்கள் தானியங்ளையும் பயிறு வகைகளையும் சாக்குப் பைகளில் மூட்டைகளாகப் பிடித்து சேமிக்கின்றனர். இந்த மூட்டைகளை அறைகளில் ஒரு மெல்லியப் பலகையை விரித்து அதன் மீது அடுக்கி வைப்பதால் அந்தச் சேமிக்கும் அறையில் தரை வழி பூச்சி, சுவர் வழி பூச்சி மூட்டைக்குச் செல்லாது.
எத்திலின் தைபுரோமைடு என்ற நச்சுவாயுவை அந்த சேமிப்பு அறையில் செலுத்தி மூட்டம் போடச் செய்வதால் அதில் உள்ள வேதிப்பொருளின் வாசனைக்காக அதில் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது. அப்படி செய்வதற்கு விலை அதிகம். தனிப்பப்பட்ட விவசாயி செய்ய முடியாது. அந்த வாயுவின் விஷம் தானியங்களில் படியும் வாய்ப்பு இருக்கிறது. அதைச் சாப்பிடும்போது நச்சு
உடலில் செல்லும்.
கயிரமோன் பொறி
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு தானியத்தைச் சேமிக்கும்போது அதில் வாயு நச்சு சேராமல் தரமாகவும், அதன் தன்மை எதுவும் மாறாமல் இருப்பதற்காக புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையம் பூச்சியியல் துறையின் மூலமாக கடந்த 2 ஆண்டுகளாக கயிரமோன் பொறியைக் கொண்டு முதல் தர ஆய்வை புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளின் சேமிப்பு கிடங்குகளில் ஆராய்ச்சி செய்தது.
இந்தப் பொறியில் அப்போது கயிரமோன் கொப்பியில் உள்ள ஹார்மோன் வாசனைக்காக அரிசியில் வரக்கூடிய மூக்கு வண்டு, கருப்பு வண்டு மற்றும் அரிசி மற்றும் தவிட்டில் இருந்து வரக்கூடிய டிரைபோலியம் என்ற சிகப்பு வண்டுகளும் ஏராளமாக இந்த கயிரமோன் பொறியை நோக்கி கவர்ந்து வந்தன.
இந்த வண்டுகள் பொறியில் சிக்குவதால் விவசாயிகளுக்கு இது மிகவும் வரபிரசாதமாக அமைந்தது.
இதைப் பற்றி இந்த நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறுகையில், இந்த இனக்கவர்ச்சி பொறி, நச்சுத்தன்மை அற்றது. அதில் வைக்கக் கூடிய கயிரமோன் என்ற ஹோர்மோன் தானியங்களைத் தாக்கக்கூடிய வண்டுகளில் இருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கயிரமோன் உயிர்தன்மை உள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதிக்காது. பயன்படுத்தும் முறை எளிது. ஒரு பாக்கில் 5 இருக்கும். இதன் விலை ரூ.160. இது 6 மாதம் வேலை செய்யும்.
இதைக் கேட்கும் விவசாயிகளுக்கு நாங்கள் வாங்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். இந்தத் தொழில்நுட்பம் நன்றாக இருக்கிறது.இதைத் தவிர 6 மாதத்துக்கு மேல் பயிறு வகைகளைச் சேமித்து வைப்போர் அதில் நல்லெண்ணெய் தடவி வைக்க வேண்டும். அப்படி செய்தால் அந்தப் பயிறை தாக்கும் வண்டு உள்ளே போகாது. மணிலா பயிறை சேமிக்க மஞ்சள் கலந்து வைக்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.