போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

‌வென்றிலன் என்ற போதும்...

வேலூர், மார்ச் 5: பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.  பி.என்.பி.இன்பசேகரன் (திமுக), ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் (பாமக), டி.ஆர்.அன்பழகன் (அதிமுக), கே.ஜி.காவேரிவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:17 pm

வேலூர், மார்ச் 5: பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

 பி.என்.பி.இன்பசேகரன் (திமுக), ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் (பாமக), டி.ஆர்.அன்பழகன் (அதிமுக), கே.ஜி.காவேரிவர்மன் (தேமுதிக) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முக்கியமான வேட்பாளர்கள். இந்த 4 வேட்பாளர்களுமே வன்னியர்கள்.

இத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற திமுக விரும்புகிறது. காரணம், இதுவரை பல்வேறு நலத்திட்ட உதவிகள், அரசுத் திட்டங்கள், சலுகைகள், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடக்கம் எனப் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது திமுக அரசு. அடுத்த பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பென்னாகரம் இடைத்தேர்தலின் வெற்றியைப் பறைசாற்ற திமுக திட்டமிட்டுள்ளது.

மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளையும் தன்வசமாக்கியது திமுக. சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாமகவின் வாங்கு வங்கிச் சரிவை அம்பலப்படுத்த திமுக விழைகிறது. வந்தவாசி இடைத் தேர்தலை பாமக புறக்கணித்ததால், திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது பாமக, பென்னாகரம் தொகுதியில் தனித்துப் போட்டியிடுகிறது. தனித்துப் போட்டியிடும் பாமகவை வெற்றிகொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கோடு திமுக பணியாற்றுகிறது.

அதனால், பாமக இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலின்போதும், ஏதோவொரு பிரதான கட்சியோடு கூட்டணி கொண்டிருந்த பாமக, கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியிலிருந்து விலகி, மீண்டும் அதிமுக வசம் இணைந்தபோது, அனைத்து இடங்களில் பாமகவுக்குக் கிடைத்த தோல்வியால், தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக தள்ளப்பட்டுள்ளது.

வன்னியர்கள் அதிகம் கொண்ட பென்னாகரம் தொகுதியைத் தனது கோட்டை எனக் கூறும் பாமக, அங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

இத் தேர்தலில் பாமக பின்னுக்குத் தள்ளப்பட்டால், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது எந்தக் கட்சியோடும் கூட்டணி பேச்சு நடத்துவது இயலாமல் போகும். தனது பலத்தை  நிரூபித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, அத் தொகுதியில் முற்றுகையிட்டுத் தனது பிரசாரத்தைத் தொடர்கிறார் ராமதாஸ்.

ஆனால், திமுக-பாமக இடையே நிலவும் கடும் போட்டியின் மத்தியிலும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் உதவியோடு அதிக வாக்குகளைக் கைப்பற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. "தமிழகத்தின் இரு பிரதான திராவிட கட்சிகள் இடையேயான கடும் போட்டியில் பாமக, தேமுதிகவுக்கு இடம் கிடையாது' என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க அதிமுக முயல்கிறது. போட்டியிடும் பிற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, அதிமுகவுக்கான ஆதரவு பலத்தை நிரூபிக்கவும் முயற்சிக்கிறது. ÷இங்கு பெறும் வாக்குகள் மூலம் அடுத்து நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் கணிசமான ஆதரவைப் பெற முடியும் என்றே அதிமுக நம்புகிறது. வன்னியர் வாக்குகளுடன், மலைவாழ் மக்களின் வாக்குகளோடு, ஆதிதிராவிடர் சமுதாய மக்களின் வாக்குகளையும் சேர்த்து பெற அதிமுக திட்டமிட்டுள்ளது.  மேலும், தன் பங்குக்கு, தனக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்க தேமுதிக போட்டியிடுகிறது. இத்தேர்தலில் யார் முதலிடம் என்பதைவிட, யார் இரண்டாவது இடம் என்பதே முக்கியமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.