நெய்வேலி, நவ. 6: என்எல்சி நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புப்படி உரிய காலத்துக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி என்எல்சி பணியில் ஓய்வு பெற்றோர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நிர்வாகத்திடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
÷என்எல்சியில் பணியாற்றி 2005-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. அதன்பின் ஓய்வு பெற்றவர்களுக்கு 1975-ம் ஆண்டு குடும்ப ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தற்போது ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
÷இந்நிலையில் 2005-ம் ஆண்டுக்கு முன்னர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் என்எல்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
÷இந்தத் தீர்ப்பை அமலாக்கம் செய்திட வலியுறுத்தியும்,மேல்முறையீட்டை தவிர்த்திட வலியுறுத்தியும் என்எல்சி பணியில் ஓய்வு பெற்றோர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நிர்வாகத்திடம் செப்டம்பர் மாதமே இருமுறை கடிதம் வழங்கியிருப்பதாக என்எல்சி பணியில் ஓய்வு பெற்றோர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த எஸ்.ஆண்டகுருநாதன் தெரிவித்தார்.
÷மேலும் இக்குழு சார்பில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மூலம் மேல் முறையீடு இன்றி தீர்ப்பினை அமலாக்கம் செய்திட வேண்டி கடிதம் அளிக்கப்பட்டிருப்பது. இதையடுóத்து முதல்வரும் இக்கடிதத்தை பரிந்துரை செய்து, மத்திய முதன்மை வருங்கால வைப்பு நிதி ஆணையருக்கு அனுப்பியுள்ளார். இக்கடிதத்தின் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆண்டகுருநாதன் தெரிவித்தார்.
÷இது தொடர்பாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை அணுகி,அவர் மூலம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கியிடமும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
÷இத்தீர்ப்பை அமலாக்கம் செய்வது தொடர்பாக திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையரும் என்எல்சி நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரைப்படி ஒரு நிறுவனத்தில் 15 சதவீதம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு செலவிடலாம் என்பதையும், தீர்ப்பில் இடம் பெறாத ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்கிடலாம் என்பதை வலியுறுத்தி கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி, மத்திய நிலக்கரித் துறைச் செயலரிடம் வலியுறுத்தியுள்ளார்.
÷இதனிடையே என்எல்சி பென்ஷன் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு மத்திய சட்டத் துறை ஆய்வில் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே தீர்ப்பு அமலாக்கம் தொடர்பான பணிகள் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளது. தீர்ப்பு அமலாக்கம் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
÷எனவே தீர்ப்பு அமலாக்கத்துக்கான நடைமுறை உத்தரவு வந்த பின்னரே நாம் விண்ணப்பங்கள் அளிப்பது சிறந்தது என ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருப்பதாக எஸ்.ஆண்டகுருநாதன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.