டி.ஜி.பி. பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எப்போது?

மதுரை: தமிழகக் காவல்துறை தலைவரான (டி.ஜி.பி.) லத்திகா சரணிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எப்போது? என தென்மண்டலத்தைச் சேர்ந்த போலீஸôரின் குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன்  கா
Updated on
2 min read

மதுரை: தமிழகக் காவல்துறை தலைவரான (டி.ஜி.பி.) லத்திகா சரணிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எப்போது? என தென்மண்டலத்தைச் சேர்ந்த போலீஸôரின் குடும்பத்தினர் எதிர்பார்ப்புடன்  காத்திருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஆள்மாறாட்டத்தில் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்டார். இது குறித்து நேரில் விசாரிக்கவும், பாதிக்கப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உதவிடவும் வருகை தந்த தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண், மதுரைக்கும் வந்திருந்தார்.

அப்போது மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸôர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு உள்ள குறைகளை போக்கும் வகையில் "மனு அளிக்கும்' நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.ஜி.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் மாவட்ட போலீஸôரிடமிருந்து அதிகமான மனுக்கள் வருவதால், அந்த மனுக்களை நேரில் பெற்று விசாரிக்கும் வகையில் தாமே மதுரை வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மாவட்ட வாரியாக போலீஸôர், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் என வகை பிரித்து நிறுத்தி மனுக்களையும் டி.ஜி.பி. நேரில் பெற்றுக்கொண்டார். சிலரிடம் குறைகளை நேரில் கேட்ட டி.ஜி.பி., ஓரிரு வாரத்தில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதில், பெரும்பாலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு கேட்டு ஏராளமானோர் மனு அளித்திருந்தனர். கடந்த 1972 ஆம் ஆண்டில் போலீஸôக சேர்ந்தோர் பல்வேறு சிறிய ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர்.

குறிப்பாக பணிக்கு ஒருசில மணி நேரம் தாமதமாக வந்தது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்கூட்டி தகவல் கூறாமல் விடுமுறை எடுத்தது, அதிகாரிகளுக்கு கட்டுப்படவில்லை என்பன போன்ற புகாரின் பேரில் நடவடிக்கைக்கு உள்ளானோரும் டி.ஜி.பி.யிடம் தங்களுக்கு கெüரவமளிக்கும் வகையிலாவது ஊதிய உயர்வு இன்றி சப்-இன்ஸ்பெக்டர் பதவி அளிக்குமாறும் கோரியிருந்தனர்.

அத்துடன் பல ஆண்டுகளாக நிறுத்திவைத்திருக்கும் தினப்படி தொகையை வழங்கக் கோரியும், இடமாறுதல் வேண்டுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏராளமானோர் மனு அளித்திருந்தனர்.

ஆனால், இந்த மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே போலீஸôரின் ஆதங்கமாக உள்ளது. மேலும், 1980, 1982 ஆகிய ஆண்டுகளில் பணிக்குச் சேர்ந்த போலீஸôருக்குக் கூட சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1972-ம் ஆண்டில் சேர்ந்த போலீஸôர் பலர் ஓய்வு பெறும் நிலையில் இருந்தும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகர் போலீஸ் நிர்வாகம் தரப்பில் நினைவூட்டல் குறிப்பு மதுரையிலிருந்து சென்னைக்கு கடந்த வாரம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தங்களது கோரிக்கை குறித்து சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் சென்று மனு அளிக்க நினைத்தாலும், டி.ஜி.பி.யை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை என்றும் போலீஸôர் பலர் ஆதங்கப்படுகின்றனர்.

டி.ஜி.பி.யே நேரில் வந்து மனு வாங்கியதால் நிச்சயம் மனு மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் போலீஸôர். ஆனால், பல மாதங்களாகியும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லை.

போலீஸôரின் கோரிக்கைகள் உடனடியாக கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வரும் உறுதி கூறியுள்ளார். அவரது கவனத்துக்கு கொண்டு சென்றாலாவது தங்களது மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே போலீஸôரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com