நாற்றங்காலை பராமரிப்பது எப்படி?

புதுச்சேரி: நெல் சம்பா சாகுபடிக்கு இப்போது நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்காலை நன்றாக பராமரிக்காவிட்டால் நெல் நடவு செய்யும் போதே பூச்சி தாக்குதல் இருக்கும். இதனால் பயிர் வளர்ச்சியில் பாதிப்
Published on
Updated on
2 min read

புதுச்சேரி: நெல் சம்பா சாகுபடிக்கு இப்போது நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. நாற்றங்காலை நன்றாக பராமரிக்காவிட்டால் நெல் நடவு செய்யும் போதே பூச்சி தாக்குதல் இருக்கும். இதனால் பயிர் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

÷இது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் டாக்டர் என். விஜயகுமார் கூறியது:

÷ஓர் ஏக்கர் நெல் சாகுபடிக்கு 8 சென்ட் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். நாற்றங்கால் அருகில் ஒரு விளக்குப் பொறி கட்ட வேண்டும். இலைபேனைக் கட்டுப்படுத்த 1 சென்ட் நாற்றங்காலுக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற வீதம் விசைத்தெளிப்பானில் ஊற்றி நாற்றின் நுனியில் பீச்சி அடிக்க வேண்டும். 20 டி வடிவ குச்சி நட வேண்டும்.

÷3 சதவீதம் தரம் உள்ள 100 மி.லி. வேப்ப எண்ணெய் 100 கிராம் காதி சோப்புடன் கலந்து நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றங்கால் தயார் செய்த 10 நாளில் இருóந்து 15 நாளைக்குள் இதைச் செய்ய வேண்டும். 15 நாளைக்குப் பிறகு இலை சுருட்டுப் புழு தென்பட்டால் தாக்குதலைக் குறைக்க உயிரின பூஞ்சான் கொல்லி மருந்தான பெவேரியா பேசியானா 1 கிலோ அளவுக்கு அதிகாலை பொழுதில் தெளிக்க வேண்டும்.

÷நாற்றங்காலில் பச்சை தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த 8 சென்ட் நாற்றங்காலுக்கு 5 சீத்தா பழக்கொட்டையின் சாற்றை எடுத்து தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகம் தென்பட்டால் 1 சென்ட் நாற்றங்காலுக்கு 175 கிராம் கார்போபியூரான் என்ற குருணை மருந்தை வேரில் தூவ வேண்டும்.

÷இலைபுள்ளி நோயைக் கட்டுóப்படுத்த பெவிஸ்டின் என்ற பூஞ்ஞான மருந்தை 2 கிராம் அளவுக்கு 1 லிட்டர் நீரில் கரைத்து இலை மீது தெளிக்க வேண்டும். இப்போது தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக பகல் நேரங்களில் அதிகமாக காற்று வீசுவதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாகி நாற்றின் நுனி கருகுகிறது. நாற்றின் இலை பழுப்பு நிறத்தில் இருந்தால் அது இலை பேன் தாக்குதல் அறிகுறி. இதைக் கண்டறிய, விவசாயிகள் தங்களின் உள்ளங்கையை தண்ணீரில் நனைத்து நாற்றங்கால் மீது தடவி திருப்பிப் பார்த்தால் உள்ளங்கையில் தலையில் இருக்கும் பேன் மாதிரி சிறிய பேன் இருக்கும். இதுதான் இலை பேன். இது இலை சாற்றை உறிஞ்சும். இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும்.

சொர்ணாவாரியில் பாதிப்பு

சொர்ணாவரி நெல் சாகுபடியில் ஏஎஸ்டி 16 நெல் ரகத்தில் தண்டு அழுகல் நோய், இலை உறை அழுகல் நோய் இப்போது காணப்படுகிறது. கதிர் வந்தப் பிறகும் அதிகம் தென்படுகிறது. இதனால் கதிர் சரியாக பால் பிடிக்காமல் பதராக காட்சி அளிக்கிறது. இதைச் சரி செய்ய முதலில் வயலில் உள்ள நீரை வடி கட்ட வேண்டும்.

÷நீரை வடி கட்டியப் பிறகு நெல் பயிரின் கீழ் பகுதியில் நீவி விட வேண்டும்.

ரிசல்ட் அல்லது டில்ட் அல்லது கேலிக்ஸின் என்ற எதாவது ஒரு மருந்தை ஓர் ஏக்கருக்கு 125 கிராம் என்ற அளவுக்கு கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். அதன் பிறகு ஓர் ஏக்கருக்கு 1 கிலோ உயிரி ரக பாக்டீரியோ நோய் கொல்லி மருந்தான சூடோமோனாஸ் என்ற மருந்தை தெளித்து நிவர்த்தி செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com