வேகம் இழந்தது காரைக்கால் - நாகூர் அகல ரயில் பாதைப் பணி

காரைக்கால்:  காரைக்கால்- நாகூர் ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2010-ல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இலக்கு காலம் முடிந்தும் இந்தப் பணிகள் முழுமைபெறாததால், பணிகளை விரைந்
வேகம் இழந்தது காரைக்கால் - நாகூர் அகல ரயில் பாதைப் பணி
Updated on
1 min read

காரைக்கால்:  காரைக்கால்- நாகூர் ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 2010-ல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இலக்கு காலம் முடிந்தும் இந்தப் பணிகள் முழுமைபெறாததால், பணிகளை விரைந்து முடித்து, ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

÷நாகூரிலிருந்து காரைக்கால் வரை 10.5 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில்பாதை அமைக்கும் பணி கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஒப்பந்தப் பணியை ஏற்றவர்களுக்கு சவாலாக இருப்பவை 7 பெரிய ஆறுகளின் குறுக்கே பாலம் அமைப்பதும், 32-க்கும் மேற்பட்ட சிறிய வாய்க்கால்களின் குறுக்கே பாலம் அமைப்பதும், சில இடங்களில் சுரங்க வழி அமைப்பதும்தான்.

   பெரிய ஆறுகளான வெட்டாறு முதல் அரசலாறு வரையிலான பாலங்களின் கட்டுமானப் பணிகளும், காரைக்காலில் ரயில்வே நிலையம் அமைக்கும் பணியும் முடிந்திருந்தாலும், திருமலைராஜனாறு, முல்லையாறு பாலம் உள்ளிட்டவையும், சுரங்க வழிகளும், நிலத்தில் தண்டவாளம் அமைப்பதும் முடிக்கப்படாமல் உள்ளன.

   நாகூரிலிருந்து காரைக்கால் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் தனியார் கப்பல் துறைமுகம் வரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரயில் பாதை அமைத்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. தனியார் துறைமுக நிர்வாகத்தின் வசதிக்காக ரயில் பாதை அமைப்பதில் ரயில்வே நிர்வாகம் காட்டிய ஆர்வத்தை, பொதுமக்களின் நலனுக்காக பாதை அமைப்பதிலும், போக்குவரத்தைத் தொடங்குவதிலும் காட்டவில்லை எனப் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

÷கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக்தில் நடந்த ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில், ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் முடிந்து ரயில் போக்குவரத்து தொடங்கும் என, ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் முடிந்தும் காரைக்கால் ரயில் பாதைப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. ரயில் பாதை, பாலம் அமைக்கும் பணிகளை இடைவிடாது தொய்வின்றிச் செய்து வரும் தனியார் ஒப்பந்த நிறுவனம், இந்தப் பணியில் அதிக அனுபவமும், உயர் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி பணிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

÷அவ்வாறு இருக்கும் போது, பணிகள் தாமதமாவதற்கு ரயில்வே துறை கண்காணிப்பில் குளறுபடி உள்ளதா, ஒப்பந்த நிறுவனத்துக்கு முழு ஒத்துழைப்பு தரப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரயில்வே நிர்வாகம் உடனடியாக உயர்நிலை ஆய்வுக் குழுவை காரைக்காலுக்கு அனுப்பி, மெதுவாக நடைபெறும் இந்தப் பணிகளை விரைவாக முடிக்க உரிய ஏற்பாட்டை செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். ரயில் போக்குவரத்தே இல்லாத காரைக்கால் மக்களுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகங்களுக்கும் இந்த ரயில் போக்குவரத்து விரைவாகத் தொடங்கப்பட்டால் அதிகப் பயன் கிடைக்கும் எனக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com