திருச்சி, நவ. 1: திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மதில் சுவரில் சில கற்கள் திங்கள்கிழமை அதிகாலை திடீரென பெயர்ந்து விழுந்ததால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலைச் சுற்றி ஏறத்தாழ 40 அடி உயர, 3 அடி அகல பெரிய மதில் சுவர் உள்ளது.
இந்த சுவரில் ஆங்காங்கே சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், செடிகளும் வளர்ந்துள்ளன.
இந்நிலையில், மாணிக்க பிள்ளைத் தெருவில் உள்ள மதில் சுவரின் ஒரு பகுதியில் இருந்து நான்கு பெரிய கல்கள் திடீரென திங்கள்கிழமை அதிகாலை பெயர்ந்து விழுந்தன.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அறநிலையத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.
மேலும், மதில் சுவரில் ஆங்காங்கே வளர்ந்திருந்த செடிகளை ஊழியர்கள் அகற்றினர்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் மதில் சுவரை முறையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.