சென்னை,டிச. 24: தமிழக காவல்துறையில் 6 ஏ.டி.ஜி.பி.க்கள் உள்பட 10 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலர் (பொறுப்பு) டி.எஸ். ஸ்ரீதர் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி நரேந்திரபால் சிங், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளார். கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையர் ஐ.ஜி. அம்ரேஷ் பூஜாரி உளவுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பணி அடைப்புக்குள்):
டி.ராஜேந்திரன் - ஏ.டி.ஜி.பி. மனித உரிமை ஆணையம் (தொழில் நுட்ப பிரிவு ஏ.டி.ஜி.பி.)
கே.பி. மகேந்திரன்- ஏ.டி.ஜி.பி., தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி.)
மிதிலேஷ்குமார் ஜா - ஏ.டி.ஜி.பி. தொழில்நுட்ப பிரிவு (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஏ.டி.ஜி.பி.)
ஆர். சேகர் - ஏ.டி.ஜி.பி. ரயில்வே காவல்துறை--புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடம் (சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி.)
டி.கே. ராஜேந்திரன் - ஏ.டி.ஜி.பி. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் (நிர்வாகப் பிரிவு ஏ.டி.ஜி.பி.)
நரேந்திரபால் சிங் - ஏ.டி.ஜி.பி. சி.பி.சி.ஐ.டி. (ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி.)
அம்ரேஷ் பூஜாரி - உளவுத்துறை ஐ.ஜி., (கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர்)
பி. தாமரைக்கண்ணன்- சென்னை பெருநகர காவல் சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையர் (உளவுத்துறை ஐ.ஜி.)
சஞ்சய் அரோரா-சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து கூடுதல் ஆணையர் (சென்னை பெருநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையர்)
டி.பி.சுந்தரமூர்த்தி - கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் (சென்னை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.