சென்னை, டிச. 26: சுற்றுலா மையமாகத் திகழ்ந்தாலும், அதற்கான எவ்வித கட்டமைப்புகளும் இன்றி இருப்பதாலேயே, பழவேற்காட்டில் ஏராளமான விபத்துகள் நேரிடுகின்றன என்று சுற்றுலாப் பயணிகள் புகார் கூறுகின்றனர்.
சென்னையை அடுத்த பொன்னேரியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது பழவேற்காடு. பங்கிங்காம் கால்வாயில் இருந்து வரும் நீர் இங்கு தேங்குகிறது. தமிழக, ஆந்திர மாநிலங்களின் எல்லையில் மொத்தம் 481 சதுர கி.மீ. தூரத்துக்கு பரிந்து விரிந்திருக்கும் இந்த ஏரி, தமிழகப் பகுதியில் 153 சதுர கி.மீ. தூரத்தைக் கொண்டிருக்கிறது.
இங்கு ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டுப் பறவைகள் வருவது வழக்கம். இதனால், இப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது தமிழ்நாடு வனத்துறை. சுற்றுலா மையமாகத் தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் அறிவித்தது.
முகத்துவாரம்: இந்த ஏரியிலிருந்து கடலுக்குச் செல்ல இரு முகத்துவாரங்களை இப் பகுதி மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இப்பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் படகோட்டிகளுக்கு அனுமதி கிடையாது. தடையை மீறிச் சென்ற இடத்தில்தான், ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த முகத்துவாரப்பகுதி, ஆண்டுக்கு 4 மாதங்கள் மட்டும் இயற்கையாகவே திறந்திருக்கும். அப்போது, ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் கடல் நீர் ஏரிக்குள் புகுவதும், ஏரி தண்ணீர் கடலுக்குள் செல்வதும் மாறி, மாறி நடக்கும். மற்ற காலங்களில் மணல் திட்டு உருவாகிவிடும். ஆனால், தொடர்ந்து கடலுக்குள் செல்ல மீனவர்கள் இங்கு முகத்துவாரப் பகுதியில் பொக்லின் இயந்திரம் மூலம் மணல் திட்டை ஆழப்படுத்தியிருக்கின்றனர். இதனால் இங்கு எப்போதும் முகத்துவாரப் பகுதி திறந்திருக்கும். முகத்துவாரத்தின் பக்கத்திலேயே இருக்கும் மணல் திட்டு ஒன்றில்தான், "சிட்டிசன்' திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகே, இந்த இடம் மக்களிடம் பிரபலமாகத் தொடங்கியது. குறிப்பாக, 2004-ம் ஆண்டுக்குப் பிறகே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. சுற்றுலா வரும் பயணிகளில் பலர், மீன் இறக்குதளம் அருகே இருக்கும் படகுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, ஏரியில் பயணம் செய்கின்றனர். இதற்காக ரூ. 300 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கின்றனர் படகோட்டிகள்.
படகோட்டிகளுக்கோ, சுற்றுலாப் பயணிகளுக்கோ எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. உயிர்க்காக்கும் உபகரணங்களும் இன்றி, பொதுமக்கள் படகில் பயணம் மேற்கொள்கின்றனர். அதேபோல, படகோட்டிகளும் எத்தனை பேர் வந்தாலும் படகில் ஏற்றி அழைத்துச் செல்கின்றனர்.
மினி புதுச்சேரி: பழவேற்காடு ஏரிக்கு சுற்றுலா வருவோரில் 80 சதவீதத்தினர் இளைஞர்கள். இவர்களில் பெரும்பாலானோர் படகுகளில் மணல் திட்டுப் பகுதிக்குச் சென்று, அங்கு மது அருந்துவதாகக் கூறப்படுகிறது. அதனால் இப் பகுதியை "மினி புதுச்சேரி' என்கின்றனர் இங்குள்ள வியாபாரிகள். இவ்வாறு, மது அருந்தும் இளைஞர்கள், போதையில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெறுகிறது. இதைக் கண்காணிக்கவோ, தடுக்கவோ அல்லது முறைப்படுத்தவோ யாரும் கிடையாது. அதேபோல, இங்கு காவல்துறையின் புறக்காவல் நிலையம் ஏதும் இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறினர்.
இயற்கை விரும்பிகள் சுற்றிப் பார்க்கச் சிறந்த இடம் எனக் கூறி, சுற்றுலா பயணிகளைக் கவர நடவடிக்கை எடுக்கும் சுற்றுலாத் துறை, அப் பகுதியை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுலாவுக்கான அடிப்படை கட்டமைப்புகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாகியும், திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இதனாலேயே விபத்துகள் நேரிடுகின்றன என்ற புகாரை முன் வைக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


