சிறந்த நூல்கள், பதிப்பகங்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் அறிவிப்பு

சென்னை, ஜன.10: 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  பரிசுபெற்ற நூலின் ஆசிரியருக்கு ரூ. 20 ஆயிரமும், அதனை பதிப்பித்த பதிப்பகங்களுக்கு ர
Published on
Updated on
2 min read

சென்னை, ஜன.10: 2009-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு தமிழக அரசின் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 பரிசுபெற்ற நூலின் ஆசிரியருக்கு ரூ. 20 ஆயிரமும், அதனை பதிப்பித்த பதிப்பகங்களுக்கு ரூ. 5 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஜனவரி 16 மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி இந்தப் பரிசுகளை வழங்குவார்.

 தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நூல்கள் மற்றும் பதிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 மரபுக் கவிதை, புதுக் கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சுற்றுப்புறவியல், கணினிவியல், நாட்டுப்புறவியல், இதழியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

 இதுபோன்று 2009-ம் ஆண்டுக்கான பரிசுக்கு 31 நூல்களும், அதன் பதிப்பகங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:

 இரா மணியன் எழுதிய பெரியார் காவியம் (சீதை பதிப்பகம்), கவிஞர் கவிமுகில் எழுதிய பூட்டாங்கயிறு (வனிதா பதிப்பகம்), எஸ். அர்ஷியா எழுதிய ஏழரைப் பங்காளி வகையறா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.), ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ஆண்டாள் பிரியதர்ஷினி சிறுகதைகள் (ஏகம் பதிப்பகம்), சி. செந்தமிழ்ச்சேய் எழுதிய செம்பியன் தமிழவேள் (மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப் பணி அறக்கட்டளை வெளியீடு).

 பாவண்ணன் எழுதிய பச்சைக்கிளியே பறந்துவா (அன்னம் பதிப்பகம்), பெ. மாதையன் எழுதிய அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக் கவிதை மரபும் (பாவை பப்ளிகேஷன்ஸ்), இலங்கையைச் சேர்ந்த த. கனகரத்தினம் எழுதிய செந்தமிழ் வளம்பெற வழிகள் (மணிமேகலைப் பிரசுரம்), கு.வெ.கி. ஆசான் எழுதிய கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (கயல்கவின்), கே.ஆர்.ஏ. நரசய்யா எழுதிய கம்போடியா நினைவுகள் (பழனியப்பா பிரதர்ஸ்), ந.க. மங்கள முருகேசனின் தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை (தென்றல் பதிப்பகம்), க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு (நக்கீரன் பதிப்பகம்), ஆர்.வி. ஜெபா ராஜசேகர் எழுதிய வளமிகு சூரிய ஆற்றல் இயற்பியல் (ஈடன் பதிப்பகம்), சி. சரவணகார்த்திகேயன் எழுதிய சந்திரயான் (கிழக்கு பதிப்பகம்), மா. நன்னன் எழுதிய பெரியாரைக் கேளுங்கள் (ஏகம் பதிப்பகம்), எஸ்.பி. சொக்கலிங்கம் எழுதிய காப்புரிமை (கிழக்கு பதிப்பகம்).

 கி. முப்பால் மணி எழுதிய தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.), ஜவகர் சு. சந்தரம் எழுதிய கற்றலும் கற்பித்தலும் (கங்காராணி பதிப்பகம்), ம. சுவாமியப்பன் எழுதிய வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.), ம.செ. இரபிசிங் எழுதிய தமிழ் இணையம் தமிழ் வலைதளங்கள்: பங்களிப்பும் பயன்பாடும் (நர்மதா பதிப்பகம்),

 சு. சண்முக சுந்தரம் எழுதிய நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை (காவ்யா பதிப்பகம்). வே. பிரபாகரன் எழுதிய ஒரு பைசாத் தமிழன் அயோத்திதாச பண்டிதர் (திருவள்ளுவர் ஆய்வு நூலகம் வெளியீடு), சுப. வீரபாண்டியனின் ஒன்றே சொல், நன்றே சொல் (3 தொகுதிகள்) (வானவில் புத்தகாலயம் பதிப்பு), ப்ரியா பாலு எழுதிய ஒலிம்பிக் சாதனையாளர்கள் (நர்மதா பதிப்பகம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com