எழுத்தாளர் தாமரைக்கண்ணன் மறைவு

மதுராந்தகம்,ஜன.19:  பிரபல எழுத்தாளர் முனைவர் தாமரைக்கண்ணன் (படம்) (77), காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஜனவரி 19) காலமானார். தாமரைக்கண்ணனுக்கு பத்மாவதி என்ற
எழுத்தாளர் தாமரைக்கண்ணன் மறைவு
Updated on
1 min read

மதுராந்தகம்,ஜன.19:  பிரபல எழுத்தாளர் முனைவர் தாமரைக்கண்ணன் (படம்) (77), காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஜனவரி 19) காலமானார்.

தாமரைக்கண்ணனுக்கு பத்மாவதி என்ற மனைவியும், 4 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் அச்சிறுப்பாக்கத்தில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 94441-66189. சிறுகதை, நாவல், நாடகம்,வரலாறு,குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார் தாமரைக்கண்ணன். இதில் சங்கமித்தரை,வரலாற்றுக் கருவூலம்,நெஞ்சத்தில் நீ... ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றவை.

சிறுகதைச் செம்மல்,பல்கலைச் செம்மல், நாடகமாமணி, திருக்குறள் நெறிதென்றல் உள்ளிட்ட விருதுகளையும் தமிழக அரசு இவருக்கு வழங்கியுள்ளது.மேலும் இவர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நல்லாசிரியர் விருது பெற்றவர். உலகப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com