சிதம்பரத்தில் ஜூலை 22-ல் தெய்வச் சேக்கிழார் திருவிழா

சிதம்பரம், ஜூலை 16: சிதம்பரத்தில் தமிழ்ப் பேரவை சார்பில் தெய்வச் சேக்கிழார் திருவிழா வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 3 நாள்களும் திருமுறைப் பண்ணி
Updated on
1 min read

சிதம்பரம், ஜூலை 16: சிதம்பரத்தில் தமிழ்ப் பேரவை சார்பில் தெய்வச் சேக்கிழார் திருவிழா வருகிற ஜூலை 22-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் கீழவீதி ராசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

3 நாள்களும் திருமுறைப் பண்ணிசை, ஆன்மிக பேரூரை, இலக்கியப் பேரூரை, பட்டிமன்றம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஜூலை 22-ம் தேதி: மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். காசி மடாதிபதி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் ஆன்மிகப் பேரூரையாற்றுகிறார். ஆனந்த நடராஜ தீட்சிதர் வாழ்த்துரையாற்றுகிறார். கோவை சிவப்பிராச சுவாமிகள் இலக்கியப் பேரூரை, த.அகரமுதல்வரன் நடுவராக கொண்ட சேக்கிழார் பாடிய நாயன்மார்கள் வரலாறு சமூக வாழ்வை ஏற்கத்தக்கனவா? எல்லை கடந்தனவா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.

ஜூலை 23-ம் தேதி: சிவத்திரு சோ.சத்தியசீலனார் ஆன்மிகப் பேரூரையாற்றுகிறார். தமிழ்த்திரு நாஞ்சில்சம்பத் இலக்கியப் பேரூரையாற்றுகிறார்.

ஜூலை 24-ம் தேதி: திருத்தணி என்.சுவாமிநாதனின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி, சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றுகிறார்.

மத்திய இணைஅமைச்சர் ஜெகத்ரட்சகன் இலக்கியப் பேரூரையாற்றுகிறார். அவ்வை து.நடராஜன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில் திருவள்ளுவர் பார்வையில் சேக்கிழார் என்ற தலைப்பில் பேராசிரியர் மு.சிவச்சந்திரனும், இளங்கோவடிகள் பார்வையில் சேக்கிழார் என்ற தலைப்பில் முனைவர் பனசை மூர்த்தியும், கம்பர் பார்வையில் சேக்கிழார் என்ற தலைப்பில் முனைவர் இரா.அன்பழகனும் உரையாற்றுகின்றனர்.

சிவத்திரு நட.ஜெயராமன் நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்ப் பேரவைத் தலைவர் ராம.ஆதிமூலம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com