

புதுச்சேரி, மே 30: புதுச்சேரி சட்டப் பேரவையின் தாற்காலிக தலைவராக டி. தியாகராஜன் (படம்) நியமிக்கப்படுகிறார்.
÷தேர்தலுக்குப் பிறகு இப்போது 13-வது சட்டப்பேரவை அமைகிறது. இப் பேரவையின் தாற்காலிக தலைவராக தியாகராஜன் நியமிக்கப்படுகிறார்.
÷முதல்வர் என்.ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் இக்பால்சிங்கை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து தியாகராஜனை தாற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக நியமிக்கும் கோப்பை வழங்கினார். இதையடுத்து அவரை தாற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கும் நடவடிக்கையில் துணைநிலை ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.
÷இதையடுத்து தாற்காலிக சட்டப் பேரவைத் தலைவராக டி. தியாகராஜன் ஜூன் 1-ம் தேதி பதவியேற்பார் என்று தெரிகிறது. அவருக்கு துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.