
புதுச்சேரி, செப்.5: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியின்போது வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியின்போது இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 108 இடங்களில், காவல்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
இந்த சிலைகளைக் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடந்தது. இதில் சாரம் பகுதியில் வைக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலை முன்னே செல்ல புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டு இருந்த மற்ற விநாயகர் சிலைகள் பின் தொடர்ந்து வந்தன.
சாரம் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் காமராஜர் சாலை, அண்ணா சாலை, வல்லபாய் பட்டேல் சாலை, கடற்கரை சாலை வழியாக பழைய துறைமுகத்தை அடைந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கிரேன்கள் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.
இதில் விநாயகர் சதுர்த்தி விழாப் பேரவை தலைவர் குமரகுரு, பொதுச் செயலர் அ.வா.சனில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.