டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், பள்ளிப்பட்டு.

திருத்தணி, மார்ச் 31: பள்ளிப்பட்டு தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் நிறைவேற்றிய பணிகளால் பெரும்பாலும் அவருக்கு ஆதரவு நிலையே காணப்படுகிறது. பள்ளிப்பட்டு தொகுதியில் கடந்
டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், பள்ளிப்பட்டு.

திருத்தணி, மார்ச் 31: பள்ளிப்பட்டு தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் நிறைவேற்றிய பணிகளால் பெரும்பாலும் அவருக்கு ஆதரவு நிலையே காணப்படுகிறது.

பள்ளிப்பட்டு தொகுதியில் கடந்த 1996-2001, 2006-2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு இருமுறை வெற்றி பெற்றவர் இவர்.

2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அரசு கொறடா பி.எம். நரசிம்மனை விட 7,315 வாக்குகள் அதிகம் பெற்று இ.எஸ்.எஸ்.ராமன் வெற்றி பெற்றார்.

சாதனைகள்:

கே.ஜி.கண்டிகை, புச்சிரெட்டிப்பள்ளி, ஸ்ரீ காளிகாபுரம், வீரமங்கலம், வங்கனூர் ஆகிய ஊர்களில் பள்ளி மாணவர்களுக்கு புதிய தேர்வு எழுதும் மையங்கள் அமைக்கப்பட்டன.

திருத்தணி ஒன்றியத்தில் வீரகநல்லூர், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ராமசமுத்திரம் ஆகியவற்றில் சமத்துவபுரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

பொதட்டூர்பேட்டையில் புதிய போக்குவரத்துப் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.பேட்டை முதல் பள்ளிப்பட்டு வரையும், திருத்தணி முதல் பள்ளிப்பட்டு வரை செல்லும் சாலைகள் மாநில முதன்மை சாலையாக மாற்றப்பட்டுள்ளன.

பல லட்சம் செலவில் புண்ணியம் கிராமத்தில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

நிறைவேறாத வாக்குறுதிகள்:

பள்ளிப்பட்டு பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனால் இதுவரை கல்லூரி அமைக்கப்படவில்லை. இதனால் 35 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தணி அரசு கலைக் கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயில வேண்டியுள்ளது.

பொதட்டூர்பேட்டையில் நெசவாளர் பூங்கா அமைக்கப்படும் என உறுதி கூறியிருந்தார். ஆனால் இதுநாள் வரையில் பூங்கா அமைக்கப்படவில்லை. இதனால் நெசவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பள்ளிப்பட்டு தாலுக்காவை பிரித்து ஆர்.கே.பேட்டையில் புதிய தாலுக்கா அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

ஆனால் இதுநாள் வரை ஆர்.கே.பேட்டையில் தாலுக்கா அலுவலகம் அமைக்கப்படவில்லை. இதனால் 40 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிப்பட்டு தாலுக்காவுக்கு செல்ல வேண்டியுள்ளது. இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் இ.எஸ்.எஸ். ராமனுக்கு பிரச்னையை தேடித்தரும் என்கின்றனர் இவரது கட்சியினர்.

மீண்டும் போட்டி:

தற்போது பள்ளிப்பட்டு தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் திருத்தணி தொகுதியாக மாறியுள்ளது. திருத்தணி தொகுதியும் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால்

டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com