தொகுதி - ஓர் அறிமுகம்!: பொன்னேரி (தனி)

தொகுதி பெயர் : பொன்னேரி தொகுதி எண் : 2 அறிமுகம் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் பொன்னேரி சிறிய தொகுதியாகும். எல்லை : சீரமைக்கப்பட்டுள்ள இ
தொகுதி - ஓர் அறிமுகம்!: பொன்னேரி (தனி)

தொகுதி பெயர் : பொன்னேரி

தொகுதி எண் : 2

அறிமுகம் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் பொன்னேரி சிறிய தொகுதியாகும்.

எல்லை :

சீரமைக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் சோழவரம் ஒன்றியத்தில் இருந்த 39 ஊராட்சிகளில் 15 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு மாதவரம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 கிராமங்கள் பொன்னேரி தொகுதிலேயே நிடிக்கிறது.

தற்போது பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய மூன்று பேரூராட்சிகளும், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 56 ஊராட்சிகளும், சோழவரம் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளைச் சேர்த்து மொத்தம் 80 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய தொகுதியாக இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சிகள் : 3

பொன்னேரி : 18 வார்டுகள்

மீஞ்சூர் : 18 வார்டுகள்

ஆரணி : 15 வார்டுகள்

கிராம ஊராட்சிகள் : 80

மீஞ்சூர் ஒன்றியம் (56): அவுரிவாக்கம், அனுப்பம்பட்டு, அரசூர், அத்திப்பட்டு, ஆவூர், ஆலாடு, அகரம், தேவதானம், ஏலியம்பேடு, இடையஞ்சாவடி, ஏறுசிவன், கூடுவாஞ்சேரி, கள்ளூர், கடப்பாக்கம், கல்பாக்கம், காட்டாவூர், லைட்ஹவுஸ் குப்பம், காட்டுப்பள்ளி, கிளிக்கோடி, கோளூர், கொடூர், கோட்டைகுப்பம், கொண்டக்கரை, காட்டூர், கம்மவார்பாளையம், காணியம்பாக்கம், மெரட்டூர், மெதூர், மேலூர், நெய்தவாயல், நாலூர், நந்தியம்பாக்கம், பூங்குளம், பெரியகரும்பூர், பிரளயம்பாக்கம், பெரும்பேடு, பழவேற்காடு, பனப்பாக்கம், ரெட்டிப்பாளையம், சேலியம்பேடு, சேகண்யம், சிறுவாக்கம், சுப்பாரெட்டிபாளையம், சோம்பட்டு, சிறுளபாக்கம், தடப்பெரும்பாக்கம், தாங்கல்பெரும்புலம், தத்தைமஞ்சி, திருப்பாலைவனம், திருவெள்ளைவாயல், வஞ்சிவாக்கம், வல்லூர், வன்னிப்பாக்கம், வாயலூர், வேளூர், வெள்ளிவாயல்சாவடி.

சோழவரம் ஒன்றியம் (24): அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, ஆண்டார்குப்பம், ஆமூர், பஞ்செட்டி, நத்தம், மாதவரம், மாலிவாக்கம், நெடுவரம்பாக்கம், ஜெகநாதபுரம், வடக்குநல்லூர், பெரியமுல்லைவாயல், திருநிலை, சின்னம்பேடு, சீமாவரம், மாபுஸ்கான்பேட்டை, போந்தவாக்கம், அருமந்தை, வழுதிகைமேடு, விச்சூர், வெள்ளிவாயல், மல்லியன்குப்பம், ஞாயிறு, பண்டிக்காவனூர்.

வாக்களர்கள் :

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்

98,000 96,803 25 1,94,828

வாக்குச்சாவடிகள் :

மொத்தம் 227

தேர்தல் நடத்தும் அதிகாரி தொடர்பு எண்:

ஏ.ஷர்மிளா, உதவி ஆணையர் (கலால்), திருவள்ளூர், 9486526623.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com