தமிழில் சிறந்த மென்பொருள்: கணியன் பூங்குன்றனார் பரிசு அறிவிப்பு

சென்னை, ஜன. 12: தமிழில் சிறந்த மென்பொருள்களை தயாரிப்பவர்களுக்கு வழங்கப்படும் கணியன் பூங்குன்றனார் பரிசு பெறுவோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது பற்றி தமிழ் வளர்ச்சி இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை வெ

சென்னை, ஜன. 12: தமிழில் சிறந்த மென்பொருள்களை தயாரிப்பவர்களுக்கு வழங்கப்படும் கணியன் பூங்குன்றனார் பரிசு பெறுவோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது பற்றி தமிழ் வளர்ச்சி இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 கணினி யுகத்துக்கேற்ப தமிழ் மொழி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆண்டு தோறும் வெளிவரும் தமிழ் மென்பொருள்களுள், சிறந்த மென்பொருளை தேர்வு செய்து கணியன் பூங்குன்றனார் பெயரில் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில், பனேசியா ட்ரீம்ஸ் வீவர்ஸ் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 2007 - 2008-ம் ஆண்டுக்கான பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

 ஆண்டுதோறும் இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அந்த விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, 2008 - 2009-ம் ஆண்டுக்கான கணியன் பூங்குன்றனார் பரிசுக்கு, தமிழ் நூல்கள்: செல்பேசி மென்பொருள் என்னும் மென்பொருளை தயாரித்த வேலூரைச் சேர்ந்த இமகத்வா டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 2009- 2010-ம் ஆண்டுக்கான பரிசுக்கு, என்.எச்.எம். ரைட்டர் 1.5.1.1 என்னும் மென்பொருளை தயாரித்த சென்னை, நியூ ஹொரைசன் மீடியா நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 இந்த இரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டிதழ் வழங்கப்படும். மேலும், 2009-2010-ம் ஆண்டுக்கான சிறப்புத் தேர்வாக, திருச்சியைச் சேர்ந்த மாணவர் ஜே. பிரான்சிஸ் தயாரித்த மொபைல் திருக்குறள் என்ற மென்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு பாராட்டிதழ் மட்டும் வழங்கப்படும்.

 சென்னையில் இம்மாதம் 16-ம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், கணியன் பூங்குன்றனார் பரிசுத் தொகை மற்றும் பாராட்டிதழ்கள் வழங்கப்

 படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com