செய்யாறு மாணவி மின்னலாதேவி மாநில அளவில் முதலிடம்

செய்யாறு, மே 27: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். செய்யாறு மேல்சமாதியான்
செய்யாறு மாணவி மின்னலாதேவி மாநில அளவில் முதலிடம்

செய்யாறு, மே 27: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

செய்யாறு மேல்சமாதியான் குளத்தெருவைச் சேர்ந்த மோகனின் மகள் மின்னலாதேவி. செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியான இவர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தமிழ்-98, ஆங்கிலம்-98, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என மொத்தம் 496 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இது குறித்து மின்னலாதேவி கூறியது:

முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தேன். அங்கு தொடர்ந்து படிக்க வசதியில்லாததால் செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ந்தேன்.

நான் மாநில அளவில் முதலிடத்தில் வருவதற்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தந்த பயிற்சியும் ஊக்கமும்தான் காரணம்.

விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், இரவில் 11 மணி வரையிலும் படிப்பேன். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை தினந்தோறும் படித்துவிடுவேன். வீட்டில் டி.வி. இருந்தாலும், நான் படிக்க வேண்டும் என்பதற்காக கேபிள் இணைப்பு வாங்கவில்லை. எங்கள் பள்ளி மாணவிகள் தொடர்ந்து சில ஆண்டுகளாக 10, 12-ம் வகுப்புகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வருகின்றனர். அந்த மாணவிகளைப் போல நானும் முதலிடம் பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது தங்கை பிரமிளாதேவியும் என் தாத்தா ஏழுமலையும் தொடர்ந்து எனக்கு நம்பிக்கை கொடுத்து வந்தார்கள்.

தந்தை போஸ்ட்மேன்: என தந்தை மோகன், முருகத்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள கிராமிய அஞ்சலகத்தில் தினக்கூலி போஸ்ட்மேனாக பணியாற்றி வருகிறார். தாயார் சாந்தி வீட்டை கவனித்து வருகிறார்.

டாக்டராக விருப்பம்: பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com