ஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி?

சிதம்பரம்: தமிழகம் முழுவதும் உள்ள ஆறு, குளம், வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை தாவரம் வளர்ந்து படர்ந்து அதனுடைய நீரோட்டத்தை தடுத்துள்ளது. பொதுப்பணித் துறையினர் ஆண்டுதோறும் ஆகாய
ஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி?
Updated on
1 min read

சிதம்பரம்: தமிழகம் முழுவதும் உள்ள ஆறு, குளம், வடிகால் வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை தாவரம் வளர்ந்து படர்ந்து அதனுடைய நீரோட்டத்தை தடுத்துள்ளது. பொதுப்பணித் துறையினர் ஆண்டுதோறும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற பல கோடி ரூபாய் செலவு செய்து அவை அழிந்தபாடில்லை.

இந்நிலையில் ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப்படுத்தவும், கட்டுப்படுத்தும் முறைகளைக் கண்டறிந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையை தமிழக அரசு பொதுப்பணித் துறையினர் கையாண்டு குறைந்த செலவில் ஆகாயத் தாமரைகளைக் கட்டுப்படுத்தலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார். ஆகாயத் தாமரையைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து அவர் தெரிவித்தது: பண்ணைக் குட்டைகள் மற்றும் கிராமப்புறக் குளங்கள் பாசன வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் பொதுவாக காணப்படும் மிதவை களைகளான ஆகாயத் தாமரையைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த வழிமுறைகளை பயனாளிகளுக்கு பயிற்சியின் மூலம் அறிவித்தல். இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாடு முறையில் பூச்சிகளின் பயன்பாடு, மீன்களின் பயன்பாடு, மருத்துவ தாவரப் பொருள்கள் மற்றும் களைகளையும் பயன்படுத்தலாம்.

அந்த வழிமுறைகளில் முதலில் நீர்வாழ் களையான ஆகாயத்தாரமரையை அந்த களையில் இயற்கை எதிரியும், உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியுமான கூண் வண்டானது (நியோசெட்டினா ஜகார்னியே புரூகி) களைகளின் இலைகளை உண்டு சேதம் ஏற்படுத்துகின்றன.

கோலியஸ் அம்பானிக்கல் என்ற கற்பூரவல்லி மருத்துவ தாவரத்தின் காய்ந்த துகள்களை பயன்படுத்துவதால் இதில் உள்ள வேதிப்பண்புகள் ஆகாயத் தாமரையின் வேரின் வழியாக எளிதில் உறிஞ்சப்பட்டு களைகளை அழிக்கின்றன.

எனவே இந்த இரண்டு உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளையும் ஒருங்கிணைந்து, முதலில் வண்டுகளை ஆகாயத் தாமரை பாதித்த நீர்நிலைகளில் விடுவித்து 15 அல்லது 20 நாள்களுக்கு பின்னர் கற்பூரவல்லி தாவரத்தின் இலைகளை பொடியாக்கி அவற்றை நீரில் கரைத்து 30 சதவீத கரைசலை ஆகாயத் தாமரையின் மேல் தெளிப்பதன் மூலம், கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த முறைகளுடன் புல் கெண்ணை என்ற மீன் ரகத்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். மேலும் களைகளின் அங்ககப் பொருள்களை பயன்படுத்தி உர உற்பத்தியும் செய்யலாம் என்கிறார் ஆர்.எம்.கதிரேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com