தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் சிக்கல்

தூத்துக்குடி, ஏப். 13: தூத்துக்குடி - கொழும்பு இடையே சிறிய பயணிகள் கப்பல் ஏப்ரல் 19-ம் தேதி இயக்கப்படும் என துறைமுக பொறுப்புக் கழகம் அறிவித்திருந்த நிலையில், இதுவரை யாரும் இலங்கை செல்ல முன்வராததால் து
Updated on
1 min read

தூத்துக்குடி, ஏப். 13: தூத்துக்குடி - கொழும்பு இடையே சிறிய பயணிகள் கப்பல் ஏப்ரல் 19-ம் தேதி இயக்கப்படும் என துறைமுக பொறுப்புக் கழகம் அறிவித்திருந்த நிலையில், இதுவரை யாரும் இலங்கை செல்ல முன்வராததால் துறைமுக நிர்வாகம் அதிர்ச்சி அடைந்

 துள்ளது.

 கடந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி தூத்துக்குடி - கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்

 பட்டது.

 1044 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த "ஸ்காட்டியா பிரின்ஸ்' என்ற அந்த சொகுசுக் கப்பலுக்கு மக்களிடையே தொடக்கத்தில் வரவேற்பு இருந்தது.

 பின்னர், படிப்படியாக பயணிகளின் வருகை குறையத் தொடங்கியது.

 இதற்கிடையே இந்தக் கப்பலை இயக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

 இந்நிலையில், கடந்த நவம்பர் 18-ம் தேதியுடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்தக் கப்பல் போக்குவரத்தின் மூலம் தூத்துக்குடி - கொழும்புக்கு இடையே 12,202 பேர் பயணம் செய்துள்ளதாகத் துறைமுகப் பொறுப்புக் கழகம் அறிவித்தது.

 இதன் மூலம் உரிமக் கட்டணமாக ரூ. 7.8 கோடியும், பயணிகள் கட்டணமாக ரூ. 1.8 கோடியும் வருவாய் கிடைத்தது.

 எரிபொருள் நிரப்புவதில் சிக்கல், அடிக்கடி ஏற்படும் பழுது உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் கப்பலை தொடர்ந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதாக துறைமுக நிர்வாகத்தினரும், கப்பல் இயக்குவதற்கு உரிமம் பெற்றிருந்த நிறுவனத்தினரும் தெரிவித்தனர்.

 சிறிய ரக கப்பல்: இந்நிலையில், பெரிய சொகுசு கப்பலுக்குப் பதிலாக 450 பேர் மட்டுமே செல்லும் வகையிலான சிறிய ரக கப்பல் வரும் 19-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று கடந்த 1-ம் தேதி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் அ. சுப்பையா தெரிவித்தார்.

 ஆனால், அதற்கான எந்தவிதமான ஏற்பாடுகளையும் துறைமுக நிர்வாகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை நடத்த உரிமம் பெற்றுள்ள பிளமிங்கோ லயன்ஸ் ஷிப்பிங் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் ஆலோசிக்காமல், உயர் அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

 சிக்கல்: இதற்கிடையே இந்த அறிவிப்புக்குப் பிறகு இலங்கை செல்ல இதுவரை யாருமே முன்பதிவு செய்யாதது துறைமுக நிர்வாகத்துக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் முன்கூட்டியே விசா பெற வேண்டும் என்ற விதிமுறை கடந்த ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கப்பல் பயணத்தை மக்கள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

 இதனால், ஏப்ரல் 19-ம் தேதி தூத்துக்குடி - கொழும்பு இடையே சிறிய பயணிகள் கப்பலை இயக்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com