தொழிலாளர்களைச் சுரண்டும் "காட்டன் சூதாட்டம்'

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஏழைத் தொழிலாளர்களின் வருமானத்தை
தொழிலாளர்களைச் சுரண்டும் "காட்டன் சூதாட்டம்'
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஏழைத் தொழிலாளர்களின் வருமானத்தை அட்டை போல் உறிஞ்சி அவர்களின் வாழ்க்கையை பாழாக்கும் காட்டன் சூதாட்டத்தை ஒழிக்க மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பொன்னேரியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை உள்ளிட்ட கூலி வேலை செய்பவர்கள். இவர்கள் வேலைக்கு சென்றால் நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் 300 வரை சம்பாதிக்கின்றனர்.

இந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் குறைந்த அளவிலான கூலி தொகையைக்கூட அவர்கள் வீட்டில் கொடுக்க முடியாதபடி செய்து விடுகிறது பொன்னேரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் காட்டன் சூதாட்டம். 

÷காட்டன் சூதாட்டம் என்றால் என்ன? இந்த சூதாட்டத்துக்கு ஒன்றிலிருந்து 99 வரை உள்ள எண்கள் இலக்கு. இந்த எண்கள் மீது ஒரு ரூபாய் பணம் கட்டினால் அதற்கு 60 ரூபாய் வழங்கப்படும். அதேபோல் 10 ரூபாய் கட்டினால் 600 ரூபாயும், 100 ரூபாய் கட்டினால் 6 ஆயிரம்  ரூபாயும் வழங்கப்படும். ஆனால் பெரும்பாலானோர் செலுத்தும் எண்ணுக்குரிய தொகை வழங்கப்படாமல் குறைந்த எண்ணிக்கையிலானோர் செலுத்தும் எண்ணுக்கே தொகை

வழங்கப்படும். 

÷இந்த எண்கள் வெளியிடும், அதை கையடக்க பேப்பரில் அச்சிடும் பணிகள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த காட்டன் சூதாட்டத்தால் வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை ஏழை தொழிலாளர்கள் இழந்து வருகின்றனர்.

÷இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறுகையில், சட்டவிரோதமான இந்த காட்டன் சூதாட்டம் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் போலீஸôர் ஒத்துழைப்புடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

÷இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தால், சூதாட்டத்தை முன்னின்று நடத்தும் முக்கியப் புள்ளிகளை கைது செய்யாமல் அவர்கள் தரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அப்பாவிகளை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைப்பதாகக் கூறப்படுகிறது.

  பொன்னேரி பகுதியில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கு அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சூதாட்டத்தை முன்னின்று நடத்திவரும் முக்கியப் புள்ளிகளை போலீஸôர் வழக்கம்போல் கைது செய்யாமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரையும், முதியவர் ஒருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தகாகக் கூறப்படுகிறது.

÷எனவே காட்டன் சூதாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை நடத்தும் முக்கியப் புள்ளிகளைக் கைது செய்து அதன் மூலம் இந்தச் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com