கடும் நெருக்கடியான இடத்தில் இயங்கும் ஊத்துக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம்

கடும் நெருக்கடியான இடத்தில் ஊத்துக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி
கடும் நெருக்கடியான இடத்தில் இயங்கும் ஊத்துக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம்
Updated on
1 min read

கடும் நெருக்கடியான இடத்தில் ஊத்துக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால் பொதுமக்களும், பத்திரம் பதிய வருவோரும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட எல்லையோரம் ஆந்திர மாநிலத்தை ஒட்டி ஊத்துக்கோட்டை தாலுகா உள்ளது. ஊத்துக்கோட்டையில் நடுவர் நீதிமன்றம், டிஎஸ்பி அலுவலகம், பேரூராட்சி, மேல்நிலைப் பள்ளிகள், அரசு மருத்துவமனை உள்பட பல அலுவலகங்கள் உள்ளன.

 ஊத்துக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம் மூலம் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். நிலம், வீடு, திருமணம், இறப்பு, பிறப்பு பதிவு செய்வதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஊத்துக்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. குறிப்பாக தற்போதுள்ள நாகலாபுரம் சாலையில் தனியார் கட்டடத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

மிகவும் குறுகலான இடத்தில் ஒரு வணிகவளாகத்தில் சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால் பதிவுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் இங்கு 15-க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருக்கவேண்டும். ஆனால் 8 பேரே பணியில் உள்னர். இதனால் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஊத்துக்கோட்டையில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் சொந்தக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன.

பேரூராட்சி எல்லையிலேயே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. எனவே அவற்றில் உரிய நிலத்தை தேர்வு செய்து சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சொந்த கட்டடம் கட்டலாம்.

அமைச்சர் ரமணாவுக்கு கோரிக்கை:

ஊத்துக்கோட்டை பேரூராட்சித் தலைவர் பத்மாவதி ராஜமாணிக்கவும், மாவட்ட அமைச்சரும், பதிவுத்துறை அமைச்சருமான பி.வி.ரமணாவிடம் சொந்த கட்டடம் கட்ட கோரிக்கை மனு அளித்துள்ளார்.

விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரும் உறுதி கூறியுள்ளார்.

எனவே, வளர்ந்து வரும் ஊத்துக்கோட்டை பகுதியில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com