தமிழ்ப் புத்தாண்டு எப்போது? கருணாநிதி விளக்கம்

சென்னை, ஏப். 14: தமிழ்ப் புத்தாண்டு குறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.  இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  சித்திரையில் தொ
தமிழ்ப் புத்தாண்டு எப்போது? கருணாநிதி விளக்கம்

சென்னை, ஏப். 14: தமிழ்ப் புத்தாண்டு குறித்து முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

 இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.

 ஒரு தேவநாள் என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அந்த தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகிறது எனவும் ஆகமங்களில் இருந்து அறிய முடிவதாக பிருகுசங்கிதை எனும் நூல் கூறுகிறது.

 மேலும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி மூன்றாம் பாகத்தில் தை என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. தை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் தொடக்க மாதம் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும், அங்கேயே சுறவ மாதமே தமிழாண்டின் தொடக்கம் என அச்சிடப்பட்டுள்ளது.

 திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இதனாலேயே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட திமுக அரசு முடிவு செய்தது. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் திருவள்ளுவர் ஆண்டினை அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com