திருவள்ளுவர் விருது பெற்ற புலவர் செ.வரதராசனார்

கள்ளக்குறிச்சி, ஜன.16: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த புலவர் செ.வரதராசனாருக்கு திருவள்ளுவர் விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இவர் இதுவரை 27 விருதுகள் பெற்றுள்ளார். த

கள்ளக்குறிச்சி, ஜன.16: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த புலவர் செ.வரதராசனாருக்கு திருவள்ளுவர் விருது சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

இவர் இதுவரை 27 விருதுகள் பெற்றுள்ளார். தற்போது 28-வது விருதாக திருவளளுவர் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இவரது தந்தை பெயர் செல்வப்பிள்ளை, தாய் ராமநுஜம் அம்மாள் ஆவார். இவரது மனைவி பெயர் ருக்மணி அம்மையார்.

இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தைச் சேர்ந்த மோ.வன்னஞ்சூர் ஆகும். இவர் 25.04.1925-ல் பிறந்தவர். மேலும், வித்வான் (புலவர்) எம்.ஏ. பி.எட்., ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் முதன்மைத் தமிழாசிரியராகவும், இறுதியில் ஓராண்டு காலம் குதிரைச்சந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராவும் பணியாற்றி உள்ளார்.

எழுதிய நூல்கள்: இவர் மணக்கும் மலர்கள் (கவிதைத் தொகுப்பு), திருக்குறள் பாயிரம் காட்டும் பண்பாடு, திருக்குறள் காமத்துப்பால் வழங்கும் வாழ்வியல் நெறிகள், புலவர் செ.வரதராசன் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு, தமிழ்ப்பாவை தமிழ்த்தாய் திருப்பள்ளி எழுச்சி, கண்ணகி தமிழரின் பண்பாட்டுச் சின்னம் ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.

தமிழரசு இதழில் குழல் இனிது யாழ் இனிது என்னும் கட்டுரை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களில் பல தலைப்புகளில் பேச்சு, உரையாடல்களையும், வானொலி நாடகங்களையும் நிகழ்த்தி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com