போலி பாஸ்போர்ட்: 6 ஆண்டுகளில் 1130 வழக்குகள் பதிவு

சென்னை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்குச் சல்கிறவர்களைவிட, வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருகிறவர்களே அதிகமாக போலீஸாரிடம் சிக்குகின்றனர்.
Updated on
2 min read

சென்னை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்குச் சல்கிறவர்களைவிட, வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருகிறவர்களே அதிகமாக போலீஸாரிடம் சிக்குகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் தப்ப முயன்றதாக கடந்த 6 ஆண்டுகளில் 1,130 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் 320 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

வருபவர்களே அதிகம் சிக்குகின்றனர்: சென்னை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்குச் செல்வோரைவிட வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு போலி பாஸ்போர்ட் மூலம் வருகிறவர்களே அதிகமாக சிக்குகின்றனர்.

உதாரணமாக 2012ஆம் ஆண்டில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்ததாக 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் போலி பாஸ்போர்ட் மூலம் இங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றதாக 23 வழக்குகளே பதியப்பட்டுள்ளன.

இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக கத்தார், சௌதி அரேபியா, ஈரான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் வேலை செய்ய செல்பவர்களிடம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்கின்றன. ஒப்பந்த கால முடியும் முன்னர் ஊருக்கு தொழிலாளர்கள் செல்ல விரும்பினால், அந்த நிறுவனங்கள் பாஸ்போர்டை தொழிலாளர்களுக்கு வழங்குவது கிடையாது. இதனால் ஊருக்கு செல்ல விரும்புகிறவர்கள் வேறு வழியின்றி போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வரும்போது குடியுரிமைத் துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயல்கிறவர்கள் குடியுரிமைத்துறையின் சோதனையின்போது சிக்கினாலும், அவர்கள் மீது விமான நிலைய போலீஸாரே வழக்குப் பதிவு செய்து கைது செய்கின்றனர். இவ்வாறு சிக்குகிறவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். இந்த வழக்கு விசாரணை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட வழக்கில் கைதாகிறவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீதிமன்றம் சிறியளவில் அபராதம் மட்டும் விதித்தது. ஆனால் இப்போது நீதிமன்றம் கடுமையான சிறைத் தண்டனையை விதிக்கிறது.

குறையும் எண்ணிக்கை: இப்போது சென்னையில் போலி பாஸ்போர்ட் வழக்குகளில் கைது செய்கிறவர்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படுவதால், இங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் தப்பி செல்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மற்றொரு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். இந்த கும்பல் இந்தியாவில் வேறு எந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடும், நீதிமன்றத்தில் சிறிய அளவில் தண்டனை விதிக்கப்படுகிறதோ அந்த விமான நிலையத்துக்கு இடம் பெயர்ந்திருக்கக் கூடும் என அவர் தெரிவிக்கிறார்.

இந்தாண்டில் இதுவரை 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. எனவே இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றங்களில் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கூறினார். மேலும் இந்த வழக்குகளில் போலி பாஸ்போர்ட் மூலம் தப்புகிறவரை மட்டும் கைது செய்யும் காவல்துறை, அந்த பாஸ்போர்டை தயாரித்து கொடுக்கும் தரகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com