வரும் 2016-ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் ரயில் பெட்டிகளில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பயோ டாய்லெட் பொருத்தப்படும் என்று தெற்கு ரயில்வே மற்றும் ரயில் இணைப்பு பெட்டிச் தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் இப்போது 50 ஆயிரம் ரயில் பெட்டிள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இப்போது வெறும் 500 பெட்டிகளில் மட்டுமே பயோ டாய்லெட் எனப்படும் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத கழிவறைகளை இந்திய ரயில்வே அமைத்துள்ளது.
இப்போது பெரும்பாலான ரயில்களில் தண்டவாளங்களில் வெளியேற்றப்படும் கழிவறைகளே நடைமுறையில் இருந்து வருகிறது.தண்டவாளங்களில் கழிவுகள் விழுவதால் துருப்பிடிக்கிறது, அதன் காரணமாக தண்டவாளங்களை மாற்ற வேண்டியிருப்பதால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.350 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது.
மேலும் ஆண்டுதோறும் புதிதாக 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்கெனவே இருக்கும் ரயில் பெட்டிகளை பயோ டாய்லெட் முறையில் மாற்றுவது என்பது ரயில்வேக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இனி புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து ரயில்களும் பயோ டாய்லெட் முறையிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
10 ஆயிரம் பெட்டிகள்: இந்தாண்டு இறுதிக்குள் மேலும் 2,500 பெட்டிகளில் பயோ டாய்லெட் அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இப்படி கணக்கிடப்பட்டு 2016-ம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் முறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் முறையை கொண்டு வருவதற்கு எப்படியும் 10 முதல் 15 ஆண்டுகள் வரையாகும் என்று தெற்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கபூர்தலாவில்... இப்போது சாதாரண கழிவறைகள் உள்ள ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் முறையை மாற்றியமைக்கும் பணி பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலையில் (ஆர்.சி.எஃப்) மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், ரயில் பெட்டிகள் அனைத்தும் கபூர்தலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பயோ டாய்லெட் பொருத்தப்படுகிறது. சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணி மட்டும் நடைபெறும். பயோ டாய்லெட் பொருத்தும் பணி இங்கு நடைபெறாது.
தெற்கு ரயில்வேயின் முதல் பயோ டாய்லெட்:தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக கொச்சுவேளி,பெங்களூர் ரயில்களில் பயோ டாய்லெட் முறை 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக பயோ டாய்லெட் என்ற நவீன கழிவறை அமைக்கப்படுகிறது. கொச்சுவேளியிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் இந்த புதிய கழிவறை அமைக்கப்படவுள்ளது. இதற்காக 20 புதிய பெட்டிகள் பயோ டாய்லெட் முறையில் மாற்றப்பட்டது.
பயோ டாய்லெட் செயல்பாடு: பயோ டாய்லெட் கழிவறைகளில் கழிவுகள் ரயிலுக்கு அடியில் வைக்கப்படும் ஒரு தொட்டியில் சேகரிக்கப்படும். இந்த தொட்டியில் பாக்டீரியாக்கள் இருக்கும்.
இந்த பாக்டீரியாக்கள் கழிவுகளை வாயுவாகவும், தண்ணீராகவும் பிரித்துவிடும். தொட்டியில் தண்ணீர் நிறைந்துவிட்டால் ரயில் 30 கிலோ மீட்டருக்கு அதிக வேகத்தில் ஓடும்போது தானாகவே திறந்து அதிலுள்ள தண்ணீர் வெளியேறிவிடும். ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை தொட்டியில் புதிய பாக்டீரியாக்கள் விடப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


