ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நாளை துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனகூடு திருவிழா 7ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனகூடு திருவிழா 7ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் பாதுசா நாயகத்தின் 839-ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மல்லீது சரீப் ஓதி தொடங்கப்படுகிறது. தொடர்ந்து 23 நாள்கள் விழா நடைபெற உள்ளது.

10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அமீர் அப்பாஸ் மந்திரி மவ்லீதும் 16ஆம் தேதி செய்யது அப்தாகீர் ஷஹீது மவ்லீதும் ஓதப்படும்.

அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு அடிமரம் நடுதல் நிகழ்ச்சியும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறும்.

24ஆம் தேதி டாக்டர் அப்துல் ஹக்கீம் மவ்லீது ஓதுவதுடன் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சந்தனக்கூடு திருவிழா ஆரம்பமாகிறது.

30ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளில் வலம் வந்து பாதுசா நாயகம் அடக்கஸ்தலத்தில் புனித சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

அக்டோபர் 6ஆம் தேதி காலை 6 மணிக்கு குர்ஆன் தமாம் செய்து சிறப்பு வழிபாடு முடித்து அன்று மாலை 5 மணியளவில் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறும். பொதுமக்களுக்கு நெய் சோறு விநியோகம் செய்யப்படும்.

இவ் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைத் தலைவர் அம்ஜத் உசேன், செயலாளர் சாதிக் பாரூக் ஆலிம், உதவித் தலைவர் செய்யதுசிராஜூதீன் மற்றும் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com