
திருப்போரூர் அருகே ரூ. 60 லட்சம் நிலத்தை அபகரித்த 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை தியாகராய நகர் முரளிமோகன் மகன் உபேந்திர கல்யாண். இவர் கடந்த 2002-ம் ஆண்டு தேவேந்திரனிடம் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போருர் அருகே தாழம்பூர் கிராமத்தில் 30 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது நிலத்தை திருப்போரூர் அருகே கண்ணகபட்டைச் சேர்ந்த பஞ்சாட்சரம் (56), தாழம்பூர் பஜனைகோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசகம் (56) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயாரித்து உபேந்திர கல்யாணின் 30 சென்ட் நிலத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதன் மதிகப்பு ரூ. 60 லட்சம்.
இது குறித்து உபேந்திரகுமார் காஞ்சிபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் பஞ்சாட்சரம், சீனிவாசகத்தை புதன்கிழமை கைது செய்த போலீஸார், செங்கல்
பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.