சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: என்.சங்கரய்யா தேர்வு

கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் முதன்மை விருதுக்கு சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது: என்.சங்கரய்யா தேர்வு

கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் முதன்மை விருதுக்கு சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தவிர, சிறந்த நூல்கள் எழுதிய 10 எழுத்தாளர்கள் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இவருக்கு விருதுடன் ரூ.1.5 லட்சத்துக்கான பண முடிப்பும் வழங்கப்படும்.

மேலும் சிறந்த படைப்புகளுக்காக (அடைப்புக் குறிக்குள் நூல்களின் பெயர்) நாவல் பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த மா.ராமையா (பயணங்கள் முடிவதில்லை), சிறுகதைப் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த கே.ஆர்.டேவிட் (மண்ணின் முனகல்), கட்டுரைப் பிரிவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த எஸ்.நீலகண்டன் (ஆகஸ்ட் 15), மலேசியாவைச் சேர்ந்த ஜானகிராமன் மாணிக்கம் (மலேசியா இந்தியர்களின் இக்கட்டான நிலை), கவிதைப் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஏகாதசி (ஹைக்கூ தோப்பு), மொழிபெயர்ப்புப் பிரிவில் எழுத்தாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாய பெங்காலி மொழியில் எழுதிய உலகாயதம் நூலை தமிழில் மொழிபெயர்த்த திருநெல்வேலி எஸ்.தோதாத்ரி ஆகியோர் சிறப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கு.சின்னப்பபாரதி எழுதிய சுரங்கம் என்ற நாவலை உஸ்பெக் மொழியில் மொழியாக்கம் செய்த உஸ்பெகிஸ்தானின் லோலாமக்துபா, பவளாயி நாவலை டேனிஷ் மொழியில் மொழியாக்கம் செய்த டென்மார்க்கின் நெல்ஸ் ஜென்ஸன், சிங்களத்தில் மொழியாக்கம் செய்த இலங்கையின் உபாலி லீலாரத்தனா, பவளாயி, தலைமுறை மாற்றம் ஆகிய நாவல்களை கன்னடத்தில் மொழியாக்கம் செய்த கர்நாடகத்தைச் சேர்ந்த பத்மநாப உடுபா ஆகியோரும் சிறப்பு விருதுக்கு தேர்வானவர்களில் அடங்குவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com